கொல்கத்தா ஜூன் 08
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாமல் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மம்தா பானர்ஜி, “இந்த நாட்டிற்கு மாற்றம் தேவை. நம் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது. இந்த ஆட்சி மாறிவிடும். நாங்கள் காத்திருந்து இந்த நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இந்த ஆட்சிக் கூட்டணி நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது. இந்த முறை நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கக் கூடாது. வேறு எவருக்கும் ஆட்சிப் பொறுப்பை வழங்க வேண்டும்”
”பாஜக அரசு சட்டத்துக்குப் புறம்பாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இன்று இந்தியக் கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. நாளையும் இதே போன்று இருக்கும் என்று அர்த்தமில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்” என்று பேசியுள்ளார்.