கேசரபள்ளி ஜூன் 12
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர்,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் குடும்ப பின்னனி, பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் என இத்தனை பொறுப்புகள் கொண்ட தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன்.
ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு புதிய முதல்வராக பதவியேற்பு விழாவில் சினிமா நடிகர்களுக்கு பின் வரிசையில் அமர வைத்துள்ளார்கள்.
அது மட்டுமின்றி, தமிழசை செளந்தரராஜன் மேடையேறி வரும்போது மரியாதை நிமித்தமாக முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமித்ஷா மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு அமித்ஷா மட்டுமே வணக்கம் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியால், ‘மிகவும் நாகரிகமானவர்’ என்று பாராட்டப்பட்டவர். இப்படிபட்ட தமிழிசைக்கு வெங்கய்ய நாயுடுவின் வணக்கம் தெரிவிக்காதது அவமதிப்பான செயலாகும்.
இதை தொடர்ந்து முதல்வர் பதவியேற்பு விழா மேடையில் வணக்கம் செலுத்திவிட்டு சென்ற தமிழிசையை செளந்தரராஜனை மீண்டும் அழைத்து அவரிடம் விரலை நீட்டி, அமித்ஷா அவரை கோபமான முகத்துடன் கண்டிப்பது போன்ற காட்சி தொலைகாட்சிகளில் வெளியானது. பெண் என்ற நாகரிகம் சிறிதும் இன்றி அமித்ஷா தமிழிசையிடம் தனது அதிருப்தியை காட்டியது பலரது மனதையும் புண்படச் செய்துள்ளது.
தங்களைவிட மற்றவர்களை ஏளனமாக கருதுவது பாஜகவினர்க்கு இயல்பானது.
பாஜகவில் பெண்களுக்கான மரியாதை இதுதான் என்பது வெளிச்சத்தில் தெரியவந்துள்ளது. இதே போன்ற நிகழ்வுகள் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வணக்கம் தெரிவித்த போது பிரதமர் மோடி முகத்தை திருப்பிகொண்டாதும். குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ புதிய நாடாளுமன்ற கட்டித்தை திறந்துவைக்கப்படாமல், பிரதமர் மோடி திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.