புதுடெல்லி ஜூலை 05
+2 மாநில கல்வியின் தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெறாமல்,நீட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மருத்துவராக வேண்டும் எனும் கனவுடன் பல லட்சம் இளைஞர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஒரு லட்சம் மருத்துவ இடங்களுக்காக இரவு பகலாக அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.
மருத்துவக் கல்வியின் நுழைவுத் தேர்வுக்காகத் தொடர்ச்சியான கல்லூரிப் படிப்பின்றிச் சில வருடங்கள் இதற்காக முயற்சிக்கபடுவதும் பிள்ளைகளின் கல்விக்கான வயது கால விரையத்தினை பெற்றோர்களையும் கவலை அடையச் செய்கிறது.
இந்த ஆண்டு மோடி அரசு தேசியத் தேர்வு முகமையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகள் விஷயத்தில் மிகப் பெரிய மோசடி செய்துள்ளது. இதன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கட்-ஆஃப் அதிகரித்துள்ளது. சலுகைக் கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முயன்ற நேர்மையான மாணவர்களின் கனவுகளைக் கருணை மதிப்பெண்கள், வினாத்தாள் கசிவு ஆகியவை தட்டிப்பறித்துள்ளன.
நீட் தேர்வு முடிவுகளைப் பார்க்கும் போது நாட்டின் 24 லட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களில் 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 பேரும்,குஜராத்தில் மட்டும் 57 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியளித்துள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் வட மாநிலங்களில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்,அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் போன்று அமைப்புடையது தேசிய தேர்வு முகமை என எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் வருகிற திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது பெரும்பான்மை பொது நலனைக் குறிப்பாகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும்.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு எவ்விதச் சட்ட விரோத நடவடிக்கையின்றி நேர்மையாக நடத்தப்பட்டதாகவும்.இது பெரிய அளவில் முறைகேடு மீறப்பட்டதற்கான எந்தவித ஆதாரங்கள் இல்லாத நிலையில் அதை முழுமையாக ரத்து செய்வது பகுத்தறிவாகாது என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசும்,தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.