Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

முன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Jul 09 2024 அண்மைச் செய்திகள்

முன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

சென்னை ஜூலை 08

ஒன்றிய அரசின் முன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், பிஜேபி அரசால் அவை பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, மற்றும்  பாரதிய சாக்ஷியா சட்டம் 2023 என மாற்றப்பட்டு,கடந்த ஒன்றாம் தேதி முதல் இச்சட்டங்கள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் இந்த பெயர்கள் மாற்றம் செய்துள்ளனர்.

இச்சட்டங்களின் உள்ள பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாத ஒன்றிய அரசு 146 எதிர்கட்சிக் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து அவசர கோலத்தில் இச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிஜேபி அரசு கொண்டுவந்தன.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாகவும். இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை ஒன்றிய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு தனது 17.06.24 கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் தலைமையில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்துள்ளார். இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News