அல் அமானத் இங்கிலீஷ் அகாடமி The Vital Role of English in Competitive Exams and Interviews என்னும் தலைப்பில் ஆங்கிலம் கற்க முனைப்புடன் இருப்பவர்களுக்காக 31-08-2024 சனிக்கிழமை அன்று மேலப்பாளையத்தில் பிஎஸ்என்எல் நகரில் உள்ள அஸ்மத் நர்சரி & பிரைமரி ஸ்கூலில் வைத்து ஒரு நிகழ்வை சிறப்பாக நடத்தியது.
அஸ்மத் ஸ்கூலில் தொடர்ந்து நடைபெற்று வரும் Spoken English வகுப்பின் மாணவ மாணவிகளும், பணியில் இருக்கும் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை Spoken English வகுப்பின் ஆசிரியர் English Khaja M.Com.,M.A. (English)., B.Ed.,P.G. D.S.E.,D.A.T., ENGLISH FLUENCY GUIDE & ACADEMIC FACILITATOR அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தினார்கள்.
டாக்டர் செய்யது சாதாத் Μ.Β.Α., ΝΕΤ. Ph.D.,Assistant Professor, Department of Business Administration MIE-Pune University - Qatar அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். சுருக்கமாக பல்வேறு கருத்துக்களை
எனும் தலைப்புகளில் ppt மூலமாக ஸ்கிரீன் செய்து அழகாக வழங்கினார்.
English communication skill வேலை வாய்ப்பிற்கு எந்த அளவிற்கு அவசியம் என்பதையும் நிறைய பேர் சப்ஜெக்டில் 100% திறமையாக இருக்கின்றனர், ஆனால் கம்யூனிகேஷனில் திறமை குறைவாக இருப்பதால் வேலைவாய்ப்பை இழந்து விடுகிறார்கள். எனவே ஆங்கிலத்தில் எழுதும் திறனையும்,மேடையில் பேசும் திறனையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
English is just a language not knowledge. எனவே தயக்கம் தவிர்த்து தொடர்ந்து முயன்றால் யாராலும் ஆங்கிலத்தில் பேச முடியும். உங்களுடைய முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று பேசினார்.
தொடர்ந்து ,ஆபிரகாம் லிங்கன் “ஒரு மரத்தை வெட்டுவதற்கு எனக்கு பத்து மணி நேரம் கொடுத்தால் நான் அதில் ஒன்பது மணி நேரத்தை கத்தியை கூர்மைப்படுத்துவதற்கே செலவழிப்பேன். மீதம் உள்ள ஒரு மணி நேரத்தில் வெட்டி முடித்து விடுவேன்” என்பார். எனவே நமது தொடர் முயற்சியின் மூலமாக நமது ஆங்கிலத்தை கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தன் வாழ்வில் நடந்த, தான் வெற்றி பெற்ற பல்வேறு நிகழ்வுகளையும் சுவைபட வழங்கினார்.
இறுதியாக கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்றது. அதில் மாணவ மாணவிகள் பல்வேறு சிறப்பான கேள்விகளை கேட்டார்கள். குறிப்பாக இன்டர்வியூ வில் கேட்கப்படக்கூடிய கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது? செல்ஃப் இன்ட்ரோடக்சன் எப்படி கொடுப்பது? சேலரி பற்றி கேட்டால் என்ன பதில் சொல்வது? என்பது போன்ற பல சிக்கலான கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்கள் திறம்பட பதிலளித்தார்கள்.
இறுதியாக ஆசிரியர் இங்கிலீஷ் காஜா அவர்கள் சாதாத் சார் அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு நினைவு பரிசும் வழங்கினார்கள். அத்துடன் வந்திருந்த அனைவருக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Al-Amanath English Academy மற்றும் Dr.M.S.A. Jafarullah Khan Ph.D.,Professor Chennai New college மற்றும் மாணவ மணவிகளுக்கும் நன்றி கூறினார்.
அத்துடன் நிகழ்வு இனிதே முடிந்தது. மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் ஊக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. கண்டிப்பாக நாங்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு எல்லாவித முயற்சிகளையும் செய்வோம் என்ற உறுதிமொழியுடன் பாராட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.