பெங்களூர் செப் 20
அரபுநாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அரபு தலைவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டு செய்தி தொலைக்காட்சிக்குச் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பதும்.
தேர்தல் நேரங்களில் இந்திய முஸ்லிம்களைத் தரமற்ற வாரத்தைகளைக் கொண்டு விமர்சிக்கக்கூடிய ஒருவர்,இருவித நிலைப்பாட்டில் உலகிவுள்ளார் என்றால் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாகத்தான் இருக்கமுடியும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,உ பி போன்ற மாநிலங்களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பு பிரச்சாரம் பிரதமர் மோடி செய்துள்ளார்.ஒரு பிரதமர் இதுபோன்று பேசுகின்றார் என்றால் இது இந்தியாவில் தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் செய்யும் பிஜேபி அரசியல் தலைவர்களிடத்தில் தான் காணமுடியும்.
இந்தநிலையில் பெங்களூர்,மைசூர் சாலை மேம்பாலம் அருகே போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா மைசூர் சாலை மேம்பாலத்திற்குச் செல்லுங்கள் ஒவ்வொரு ஆட்டோ ரிக்க்ஷாவிலும் 10 பேர் உள்ளனர்.
கோரி பால்யாவிலிருந்து மார்க்கெட்டுக்கு விடப்பட்ட மைசூர் மேம்பாலம் இந்தியாவில் இல்லை அது பாகிஸ்தானில் இருக்கிறது. இங்கு இந்தியாவின் சட்டம் அதற்குப் பொருந்தாது. நீங்கள் எவ்வளவு கண்டிப்பான காவல்துறை அதிகாரியை அங்கே பணி நியமித்தாலும், அவர்கள் அங்கு அடிக்கப்படுவார்கள். என்று முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.பலரும் நீதிபதி ஸ்ரீஷானந்தாவை விமர்சித்து வருகின்றனர். சட்டத்தை இற்றும் இடத்தில் உள்ள பிரதமரும்,சட்டம் படித்த நீதிபதியும் முஸ்லிம் வெறுப்பு பேச்சில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.