“சுல்தான் அப்துல் ஹமீத்” வெப் சீரிஸ் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் வீட்டில் துருக்கி பற்றிய ஆசைகளும் , கனவுகளும் எங்களை ஆட்கொண்டது. மொழி புரியவில்லை என்றாலும் நாட்டையும், வீட்டையும் காக்க மன்னன் படும் பாட்டையும், எதிரிகளின் சதிகளையும், துரோகிகளின் முகங்களையும், பிரயாண வாகனங்களையும், அசாதாரணமான ஆண்கள் அச்சுக்களில் இரகசியம் வெளியிடும் விதமும்,அரசுகளின் ஆடை அலங்காரமும், உறவுகளின் உணர்வுகளை தொகுத்த அழகும்,, அழகுப்பெண்களை ஆபாசமில்லாமல் காட்டிய பெருமையும் அந்த வெப் சீரிஸுக்கு உண்டு..
ஒரு ஆகஸ்ட் 25 தேதி காற்றைக்கிழித்துக்கொண்டு
கணகச்சிதமாக இறைவனின் நாட்டப்படி துருக்கியை நோக்கி,விமானம் புறப்பட்டது…!
எல்லையில்லா மகிழ்ச்சி இல்லையென்றாலும்
என்றோ கேட்ட துஆ இன்று நனவாக்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியை கூறி எல்லையை தொட்டோம் . விமானத்திலிருந்து அழகிய கடலும், ஆகாயமும் தங்கள் நீலத்தை வித்தியாசப்படுத்தியும் ஆச்சரியப்படுத்தியும் எங்களை வரவேற்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடலின் மேல் சரக்கு கப்பல்களும் காண முடிந்தது., மிகப்பெரிய நகரம் மற்றும் துருக்கியின் சிறந்த இடங்களில் ஒன்றான இஸ்தான்புல்லின் மலைகளின் சிகரத்தில் விமான நிலையம் கண்டேன்.
டர்க் இனமக்கள் வாழ்ந்ததால் அது டர்கி என்று அழைக்கப்படுகிறதாம்.ஐரோப்பிய நாடு என்றாலும் ஒரு சில மக்களே ஆங்கிலம் பேசியது அதிர்சசியாக இருந்தது. என்னைப்போன்ற சுற்றுலா வாசிகளுக்கு கூகுள் மொழிபெயர்ப்புக்கு மகத்தான வேலை அங்கு இருந்தது.
வானளாவிய மரங்களும் , வண்ணமயாமான கட்டிடங்களும், வந்தோரை வரவேற்றவிதமும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு நீண்ட பயணம் என்பதால் அசதி இருந்தும் அறைக்கு செல்லும் வரை ஆழ்ந்த தூக்கமில்லை . மலைப்பிரதேசங்களை முடிந்த வரை கண்களுக்கு குளிர்ச்சி காட்ட வேண்டிய எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது.
ஓய்வெடுத்தபின் முதலில் காணச்சென்ற இடம் இஸ்தன்புல் புளூ மசூதி.
இஸ்தான்புல் ஒரு வணிக, பொருளாதார மற்றும் சுற்றுலா மையமாகவும் இருந்தது, இது உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களைக்கண்டு வருகிறதாம்..
எத்தனை கேமராக்குள் நாம் இருந்தோமோ படைத்தவன் மட்டுமே அறிவான்.
Hagia Sophia, ஒரு அற்புதமான பண்டைய கதீட்ரல் மற்றும் மசூதி இப்போது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறதாம். இஸ்தான்புல்லின் மிகவும் புகழ்பெற்ற கட்டிடங்களில் ஓன்றாம்…!
பெரும்பாலான மசூதிகள் பிரம்மிக்க வைத்தது.கட்டிடக்கலையை துல்லியமாக , அழகிய கண்கவர் கலைநயத்துடன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே கட்டி, இன்று வரை காப்பாற்றி வரும் அந்நாட்டு அரசு மற்றும் மக்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.
பொதுப்போக்குவரத்துக்களின் அணுகல்கள் சுலபமாகவே இருந்தது. காலனிகளை பொதுப்போக்குவரத்தில் கழட்டக்கூடாதாம். இருக்கையில் படுக்க அனுமதியில்லையாம்.
நடராஜாவில் ( நடைப்பயணம்) செல்ல விரும்புபவர்கள் இங்கு தாரளாமாக செல்லலாம்.
அவர் அவர்கள் அவர்களின் வேலையை நிதானமாக பார்க்கிறார்கள். உதவி தேடுவதுமில்லை, தேடப்படுவதுமில்லை..வயதானவர்கள் சிறிய பொருளாதாரத்தை சாதரணமாக ஈட்டுகிறார்கள். நம் நாட்டைப்போன்று ஓய்வெடுப்பதை அவர்கள் விரும்புவதில்லை.
துருக்கியர்களை உணவைக் கொண்டாடியே தீர்க்கிறார்கள். கறியும் ,ஸலாடும் விதவிதமாக கிடைத்தது. ருசியான உணவு விரும்பிகளுக்கு பெரிய வேட்டை இங்கு காணப்பட்டது.மோர் ஒரு சிறந்த இடத்தையும் பிடித்திருந்தது…. ஆறாம் விரலாய் சிகரெட் அத்துனை மக்களின் கையிலும் பார்க்க முடிந்தது. அதீத குளிருக்காய் அமைதியாய் ஊதித்தள்ளுவார்கள் என என்னுடன் வந்தவர்கள் சிலாகித்தார்கள்.
துருக்கிய காபி மிகவும் பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் துருக்கி மக்கள் டீக்கு தான் அடிமையானவர்கள். 96% மக்கள் தினமும் ஒரு கோப்பையாவது தேநீர் அருந்துகின்றனர்.துருக்கியில் நெளிவுசுழிவான கண்ணாடி டம்ளரில் வழங்கப்படும் டீ-க்கு நானும் ரசிகையாகிப்போனேன்..
கவலைகள் மறந்து காட்சிகளை அனுபவிக்க வேண்டிய இடங்கள்
* இஸ்தான்புல் - ஒரு கலாச்சார களியாட்டம்
* கப்படோசியா - ஒரு பண்டைய சொர்க்கம்
* பாமுக்கலே - ஒரு பெரிய யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
* எபேசஸ் - நன்கு பாதுகாக்கப்பட்ட பண்டைய நகரம்
* ஆண்டலியா - இயற்கை அதிசயங்களின் மையம்
* ட்ராய் - பழங்கால நகரம், நவீனம் நிறைந்தது
* அரராத் மலை - ஒரு பரந்த சுற்றுலாத் தலம்
* போட்ரம் - பிரகாசிக்கும் கோடை ரிசார்ட் நகரம்
* கலிபோலி - ஒரு பழம்பெரும் புகலிடம்
* ஓலுடெனிஸ் - ஒரு காவியம் ஸ்டாப்ஓவர்
* கொன்யா - நம்பமுடியாத இஸ்லாமிய பாரம்பரிய நிலம்
விருப்ப்பட்டால் வாங்க வேண்டிய பொருட்கள்
* துருக்கி பெர்ரீ டீத்தூள்
* ஆலிவ் ஆயில் சோப்பு
* உலர் பழங்கள்
* Turkey delights
மொத்த்தில் பழமைக்கும் தொன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரலாற்றுச்சிறப்புமிக்க நாட்டில் பாதுகாப்பான பயணமாக அமைந்தது.
~MAAHMA