அன்னையே தெய்வம்
****
அன்பை எனக்கு கற்றுக் கொடுத்தாய்
ஆணி வேராய் தாங்கிப் பிடித்தாய்
இனிமையான இன்பத்தை உன்னிடம் கண்டேன்
ஈடில்லா மகிழ்ச்சியும் எனக்கு அளித்தாய்
உலகத்தை காணவும் என்னை வைத்தாய்
ஊரார் போற்ற வாழவும் செய்தாய்
எளிமையை உன்னுடைய அடையாளமாய் கண்டேன்
ஏற்றமும் இறக்கமும் கண்டு வாழ்ந்தாய்
ஐவரோடு பழகி பேசவும் வைத்தாய்
ஒளி மயமான எதிர்காலத்தை தந்தாய்
ஓடி ஓடி உழைக்கவும் செய்தாய்
ஓளவை மொழியாய் அறிவுரைச் சொன்னாய்
பெற்றவளே உன் அன்பு மேலானது
உனக்கு இவ்வுலகில் ஈடு இணையில்லை
எத்தனை உறவுகள் இருந்தாலும் உன்
அன்பிற்கு ஈடாகுமா ஆக்கமும் ஊக்கமும்
உன்னிடம் கண்டு வளர்ந்தேன் அம்மா
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்