Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கணவனுக்கு மனைவியின் கவிதை
Sep 27 2024 காலக்கண்ணாடி

கணவனுக்கு மனைவியின் கவிதை

கணவனுக்கு மனைவியின் கவிதை

****

அன்பே ஆருயிரே உனது இதயத்தில் 


எனக்கொரு இடம் கொடுத்து தாங்கியவரே


கண்ணுக்கு கண்ணாய் நேசித்த உத்தமரே


அயராது வேலை செய்தாலும் ஞாபகம்


எல்லாம் என்னை சுற்றியே வந்தது


தொலைத்தூர பயணம் என்றாலும் மனதின்


ஓரத்தில் சஞ்சலமும் இருந்துக் கொண்டது


நாட்கள் நகர்ந்தாலும் உன்னைப் பார்க்க 


துடிக்கும் ஒரே ஜீவன் நானே


பிழைப்புக்காக சென்று  உடலை வருத்தி


வேலை செய்த நொடி என்


கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது


ஈருடல் ஒருயிராக இருந்த போதிலும்


நீ தொலைவில் வர நினைத்தாலும்


ஒரு நாட்களுக்கு பிறகு தான் 


பார்க்க முடியும் அன்பே உன்


நினைவில் தவியாய் தவித்து நிற்கிறேன் 


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்