Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஊக்கம் தரும் தாக்கம்.
MAAHMA Sep 27 2024 MAAHMA

ஊக்கம் தரும் தாக்கம்.

ஊக்கமது கைவிடேல் “

தன்னம்பிக்கையை இழக்காமல்

விடா முயற்சியுடன் எடுத்த செயலை முடிப்பது.

தன்னம்பிக்கையும் இருக்கிறது, விடாமுயற்சியும் செய்ய ஆவல் உள்ளது ஆனால் ஊக்கம் மட்டும் மனிதமனதிற்கு தேவையாகவே இருக்கிறது.

ஊக்கம்  உந்துதல் என்பது நமது நடத்தையை வழி நடத்த உள்ளார்ந்த சக்தி ஆகும். குறிப்பிட்ட திசையில்நமது இலட்சியத்தை அடைய நமது நிலைப்பாட்டில் அவசியமான பலத்தை சரியான நேரத்தில் வழங்கும்சக்திதான் உந்துதல்  ஆகும்.

உந்துதல் என்பது உள்ளார்ந்த காரணிகளாகவும் வெளிக்காரணிகளாகவும் தாக்கம் வெளிப்படும்.

 

ஊக்க காரணிகள் :-

 

உடலியல் தேவை

பாதுகாப்புத் தேவை

அன்புத் தேவை

கணிப்புத் தேவை

சுயத்திறனியல் நிறைவுத் தேவை

சுயதிருப்தித் தேவைகள் (நுண்ணறிவு)

 

முதலில் உடலியில் தேவை.

 

பசி, தாகம் , தூக்கம் , கழிவுகளை நீக்குதல்.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும், அறிவைத்தேடும் மாணவர்களுக்கும் முதலில் உணவும் , தண்ணீரும்அவசியம். நமது முன்னோர்கள் அன்றே சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காரணமும் இதுதானோ. மாணவன் பசியில் இருக்கும் போது அவனுக்கு எத்தகைய கல்வியை ஊட்டினாலும் அது தோல்வியிலேயேமுடியும். இத்தகை நிலை மாணவர்களை கல்வியில் பின் தங்க செய்யும். இதனையே ஒளவையார் “பசி வந்திடபத்தும் பறந்து போகும்” என்கிறார். எனவே மாணவரின் முதல் தேவை பசிப்பிணி போக்குதல் ஆகும். அதில்ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகம் அக்கறை கொண்டால் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில்ஊக்குவிப்பினை மேலும் அதிகரிக்க முடியும். அடுத்து தாகம் . தாகம் வரும் சமயங்களில் சுத்தமான நீரும், தக்க சமயத்தில் தண்ணீரும் அவசியமாகிறது. பாடசாலைகளிலும் இதற்கான வரைமுறையுடன், வீண்விரயமில்லாமல் நீர் ஏற்பாடு செய்வது அவசியமாகிறது.

 

மல, ஜலத்தை நீக்குவதும் உடலியல் தேவைகளில் ஒன்றானது. வெளிவரும் சமயங்களில் தகுந்த ஏற்பாட்டுடன், அதை முறையாக்குவதும் மாணவர்களுக்கு சிறந்த ஊக்கம் அளிக்க ஏதுவாக இருக்கும்.

 

2.பாதுகாப்புத்தேவை

 

மாணவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு எல்லா இடங்களிலும் அவசியம். வகுப்பறை, பள்ளி, லேப், மைதானம், வீடு, வாகனம் என அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு உணர்வை வழங்குவது அவர்களின் ஆக்கம், ஊக்கத்திற்க்கு அவசியமாகிறது. பாடசாலைகளில் நம்பிக்கை பலத்தை மாணவர்களுக்கு அளிப்பதுஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

 

அன்புத்தேவை

 அன்பு என்பது குடும்பத்தில் ஆரம்பித்து பின் சமூகம் என விரிவடைய கூடிய ஒரு அம்சமாக இருக்கிறது. பாடசாலை மாணவர்களுடைய உடலியல் பாதுகாப்பு தேவை நிறைவேற்றப்பட்டால் அடுத்ததாக இருப்பதுஅன்பு தேவையாகும். கல்வி சார்ந்த விடயங்களில் மாணவர்கள் ஊக்கல் பெற வேண்டுமாக இருந்தால்அவர்களுடைய அன்பு, அவர்கள் மீதான கரிசனை, அதிகரிக்கும் போது மாணவர்கள் கல்வியை சிறந்தமுறையில் கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும். இவ் அன்பு தேவையானது மாணவருடைய பல்வேறுபட்டவிடயங்களிலே தாக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது. இன்று வீடுகளிலிருந்து மாணவர்கள் பாடசாலைநோக்கி வரும்போது வீட்டிலே அன்பு கிடைக்காதவர்களாக வரக்கூடிய தன்மையும் பார்க்கலாம். உதாரணமாகவெளிநாடுகளிலே பெற்றோர்கள் இருக்கும்போது தாய் தந்தையருடைய அன்பினை இழந்து பாட்டன், பாட்டிமாருடன் பிள்ளைகள் வாழக் கூடியவர்களாக இருக்கிறார்கள். வீட்டிலே தந்தை தாய் இருவருக்கும்இடையில் ஏற்படக்கூடிய பிரச்சனை அதன் மூலமாக பிள்ளைகள் பாதுகாக்கப்படாமல் அன்பிற்கு ஏங்கக்கூடியவர்களாக காணப்படுகின்றார்கள். இன்று அதிகமாக தனி குடும்பங்களில் இருக்கக்கூடிய விபரீதம்என்னவெனில் விவாகரத்து ஆகும். விவாகரத்தின் போது பிள்ளைகள் நிர்கதியாவதோடு பெற்றோரின் அன்பைஇழக்க கூடியவர்களாகவும், பிரச்சனைக்கு உள்வாங்க கூடியவர்களாக மாறியிருக்கிறார்கள். இவ்வாறுபல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு மத்தியிலும், சூழ்நிலையிலும் வீடுகளில் இருந்து வரக்கூடிய பிள்ளைகள்பாடசாலையில் அந்த அன்பு தேவையை நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்க கூடியவர்களாகஇருக்கிறார்கள். அது ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கும் போதும், அவருடைய சக தோழர்களிடமிருந்துகிடைக்கும் போதும் குறித்த மாணவர் சிறந்த முறையில் சந்தோஷமிக்கவர்களாக பாடசாலை மீதுஅக்கறையோடு பாடசாலைக்கு வருகை தரக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாத போதுஅவர்கள் வழித்தவரக்கூடியவர்களாகவும் பாடசாலை கல்வியை இடை நிறுத்தக் கூடியவர்களாகவும்காணப்படுகிறார்கள். இன்னும் சில மாணவர்கள் பாடசாலையில் காதல் சார்ந்த விடயங்களில்ஈடுபடுவதற்கான காரணமும் விரைவாக அவர்களுக்கான அன்பானது கிடைக்கும் போது அதிலே அவர்கள்அதீதமாக உள்வாங்கப்படுவதாகும். அத்தகைய மாணவர்களை இனம் கண்டு அவர்களுடைய குடும்பம் சார்ந்தவிடயங்களை கருத்தில் கொண்டு மாணவர்களை சிறந்த முறையில் அன்போடு அரவணைத்து அவர்களுக்குதேவையான உதவிகளை செய்யும் போது, அவர்களை கல்வி மீது நாட்டம் உடையவர்களாக மாற்ற முடியும்இதற்கு ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்களாக செயல்பட வேண்டு

 

மாணவர்களின் முகம் கண்டு ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்து வீட்டில் சமூகத்தில் அவர்களுக்குகிடைக்காத அன்பை வெளிப்படுத்திய காலம் நம்மால் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு அன்பின் தேவைஅவசியாமகிறது.

- MAAHMA