உயிரினில் கலந்திட
****
உயிருக்கு உயிராய் நேசித்த காதல்
இயற்கையோடு பூ வாசம் மலர
அவளும் நானும் நடந்து வர
உள்ளம் இன்பத்தில் திகைத்து நின்றது
அழகான காலையும் அன்போடு மலர
நம் நேசமும் நித்தமும் நினைவுகளாய்
என்னுள் அனுதினமும் வந்து செல்கிறது
எத்தனை எத்தனை இன்பங்கள் நம்முள்
எண்ணும் போது காவியம் காணாத
கதைகளும் சொல்லாத
அன்பின் சுவையில்
நானும் சுவைத்து வியந்து நின்றேன்
வாழ்வில் சுவாசமாய் நான் இருக்கிறேன்
நாளும் உன்னையே நினைத்து வாழ்கிறேன்
இன்ப துன்பம் எல்லாத்தையும் தாண்டி
இதயத்துள் இரண்டற கலந்து நின்றாய்
நம்மை யாராலும் பிரிக்க முடியாது
மெளனத்தின் மொழியில் அழைக்க
நிலையில்லாத உலகில் வாழ்வதை நினைத்து
என்னுள் ஆயிரம் எண்ணம் தோன்றிட
உன்னை வெல்ல யாராலும் முடியாதே
அன்பின் வலியது வெல்ல தாண்டினேன்
என் இதயத்தை திறந்துப் பார்த்தேன்
மனதில் சேமிப்பாய் நீயிருக்க நான்
உன்னையே சிந்திக்க தொடங்கினேன்
உனது நேசம் எனக்கு பெரிது
எனது சுவாசமே நீ தான்
நிதர்சனத்தை எல்லாம் உன்னுள் மொழிந்து
உயிரில் கலந்த உயிராய் நிற்கிறேன்
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்