உளவியலில் ஊக்கத்தேவைகள் ஆறு என மாஸ்கோ
அவர்கள்வகுத்துள்ளார்கள்.
அவை
1.உடலியல் தேவை
2.பாதுகாப்புத் தேவை
3.அன்புத் தேவை
4.கணிப்புத் தேவை
5.சுயத்திறனியல் நிறைவுத் தேவை
6.சுயதிருப்தித் தேவைகள் (நுண்ணறிவு)
மூன்று தேவைகளை பாகம் ஒன்றில்
கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான link வும் கீழே
தரப்பட்டுள்ளது. படிக்காதவர்கள் முதலில்
அதை படித்துவிட்டு பிறகு இதை படிக்கலாம்.
பாகம் 1- இதோ :- ஊக்கம் தரும் தாக்கம்.
3.கணிப்புத்தேவை
மாணவர்கள் மட்டுமல்ல மனிதர்கள் யாவரும் தம்
வாழ்வில் வரவேற்பு, கீர்த்தி, புகழ் ,
மதிப்பு ஆகியவைகளைஎதிர்பார்க்க கூடயவர்களாகவே இருக்கின்றனர். எனவே
ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊழியர்கள்
அவர்களைமுதன்மைப்படுத்தி, அவர்களின் பெயர் சொல்லி அழைப்பது,
தக்க சமயத்தில் பாராட்டுவது, சரியானமுறையில்
அவர்களை கணிப்பதை செய்ய வேண்டும். மாணவர்களின் ஊக்கத்திற்க்கு இது பெரும்
மாற்றத்தைஏற்படுத்தும். படிக்காத பிள்ளைகளுக்கு தண்டனை தரும் முன்னும் இதைப்பற்றி
யோசிக்க வேண்டும். அவர்களின் திறமையை குறித்து நல்ல ஏதாவது ஒன்றைக்கூறி பாராட்டிய
பிறகு, இதே கவனத்தை படிப்பிலும்செலுத்தினால் மாணவனின்
முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என எல்லோர் முன்னிலையிலும் கூறலாம். முதலில் நிறைய
பாராட்டிவிட்டு பிறகு அந்த மாணவனின் குறைகளை சொற்பமாக கூறி அவர்களைமாற்றலாம்.
தண்டனை தரும் சமயங்களிலும் அவர்களுக்கு உளரீதியாகவும், உடல்
ரீதியாகவும் காலம்முழுவதும் மறக்க முடியாத அதிர்ச்சி தராமல் இலகுவாக அவர்களை
கையாளலாம்.
இது, மனிதர்களின் தேவையாக
இருப்பதால் , மாணவர்களுக்கு மட்டுமல்ல
சுயத்திறனியல் தேவை
சுயமாக தனது திறனைக்கண்டு அது தன்னால் முடியுமென
அவர்களே தீர்மானித்துக்கொள்ளக்கூடியதன்மைதான் சுயத்திறனியல் தேவையாகும்.
உடல், பாதுகாப்பு, அன்பு , கணிப்பு நிறைவேற்றியபின் இதில் கவனம்
செலுத்தவேண்டும். பாடங்களைத்தேர்வுசெய்வது, விளையாட்டுத்துறையை
தேர்வு செய்வது , போட்டிகளை தேர்வு செய்து அதில்
தன்னைஉட்படுத்திக்கொள்ள எண்ணும்போது, அவர்களுக்கு
ஒத்துழைப்பு தரவேண்டும். உனக்கு இது வராது, தேவையா, என்று எதிர்மறை எண்ணங்களோடு அணுகாமல் அவர்களுக்கு நேரம் கொடுத்து, அதில் திறன்களைவளர்க்க பாதை அமைத்துத்தருவது பெற்றோர்கள் மற்றும்
ஆசிரியர்கள் மீது கடமையாக இருக்கிறது.