Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பெண்மையும்..!! மலரும்..!!
பொதிகை இன்பச் சோலை K. பெனாசீர் Sep 27 2024 கலை இலக்கியம்

பெண்மையும்..!! மலரும்..!!

 பெண்மையும் மலரும்..!!! பாகம் - 1


 அழகு என்றாலும், அறிவு என்றாலும

 கருப்பு என்றாலும், கலை என்றாலும் 

 துணிவு என்றாலும், பணிவு என்றாலும் 

 மனம் என்றாலும், நறுமணம்என்றாலும்

 கவிதை என்றாலும் ,காதல் என்றாலும்  

 கடல் என்றாலும்,தேடல் என்றாலும் 

 அனைத்திலும் சிறந்தவள் பெண்

தானோ  இல்லை அழகிய மலர்தானோ


ஆயிரம் வண்ணங்களாய் எங்கள் இதயத்தை களவாடிச் செல்லும்  வாசமிகு மலர்களே...!!!

  

 மலர்களே உன்னை சுவாசிக்க வந்தவள் தான் பெண்மையோ...!!!!

 

 பூக்களே நித்தம் நித்தம் வர்ணங்களாய் நீ  ஜொலிக்கிறாய்  அதைக் காண என் கண்கள் இமைக்காமல் காத்திருக்கிறது.என் இதயமோ தவமாய் தவம் கொள்கிறது.


 மலர் போல் மனம் வீச மங்கை அவள் மனம் முடிக்க மணமேடை வாசம் கொண்ட இன்ப மலர்களே...!!!!

 

 எங்கள் வீட்டு வாசலின் அழகிய வர்ணச்சோலை அந்த மலரை பாதுகாக்க வந்தவள் தான் பெண்மையோ...!!!


 தவழும் வயதிலிருந்து தள்ளாடும் வயது வரை உன்னை சுவாசிக்கிறேன் அதன் தருணங்களையே இங்கு நான் காவியங்களாய்  படைக்கின்றேன்...!!!


 இத்துடன் பாகம் - 1 மலர்கிறது...!!!!


 மீண்டும் என்னவள் மலர்வாள்..!!! 




 பொதிகை இன்பச் சோலை  K. பெனாசீர்