கன்னியாகுமரி
****
தமிழ் நாட்டில் 38 மாவட்டங்களில் ஒன்று.தலைநகரம் நாகர்கோவில், இங்கு தமிழ் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மூன்று நகராட்சிகள் உள்ளன.பத்மநாபபுரம், குழித்துறை குளச்சல் நாகர்கோவில் மாநகராட்சியும் ஆகும் எங்கள் ஊரின் சிறப்பைப் பார்ப்போம்.
பொருளாதாரம்
****
தமிழ் நாட்டில் மொத்த இரப்பர் உற்பத்தியில் ,95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு உள்ளது.ஆரல்வாய்மொழி இப்பகுதிக்கு பெயர் போனது ஆகும்.
முக்கிய பயிர் வகைகள்
*****
இரப்பர்,மரவள்ளிக்கிழங்கு,வாழை,பருப்பு,முந்திரி,பனை,மாம்பழம்,புளி,கடுகு,பாக்கு,பலா,கிராம்பு
கைவினைப் பொருளும் குடிசைத் தொழிலும்
*****
குமரி மாவட்டம் இதற்கு பெயர் போனதே,தோல் நீக்கப்பட்ட தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருள்கள் ஆகியன முக்கியமானவை,மேலும் சங்கால் ஆகிய கைவினைப் பொருள்களும் சிறப்பு வாய்ந்தவை,
மொத்த கயிறு உற்பத்தியில் 28,4, சதவிகிதமும் பால் உற்பத்தியில் 61,5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இரப்பர்
***
இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.மாவட்டத்தில் மேற்கு பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
பழங்கள்
****
நேந்திரம்,இரசகதளி, துளுவம்,மட்டி, கற்பகவல்லி உட்பட பல வகையான வாழைப் பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன, இவை மட்டுமல்லாமல் பலாப்பழம் மாம்பழம், ( நீலம் மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தில் விவசாய வளத்திற்கு பெருமை சேர்க்கின்றன,இவை தவிர ரோஜா,செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.
பேருந்து
***
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
(TNSTC) சென்னை, பெரியகுளம்,திருப்பூர், கொடைக்கானல்,இராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி,திண்டுக்கல்,தஞ்சாவூர், பழனி,சேலம்,கோயம்புத்தூர்,காரைக்குடி,குமுளி, போடிநாயக்கனூர்,ஈரோடு,மற்றும் சிவகாசி,ஆகிய நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது, பெரும்பாலான பேருந்துகள் நாகர்கோவிலிருந்து இயங்குகின்றன.
வானூர்தி
****
76கி.மீ.தொலைவில் உள்ள திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள சர்வதேச வானூர்தி நிலையம் ஆகும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவாமித் தோப்பு அருகே ஒரு விமான நிலையத்தை தீர்மானிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டது. இந்த முயற்சி மாவட்டத்திற்கு பல சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
கல்வி
****
கல்வி அறிவு விகிதம் (91,75) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. கல்லூரிகள்,பொறியில் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, அரசு மருத்து கல்லூரி, அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி,பல்கலை கழகம் போன்றவை எம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது.
சுற்றுலாத்தலங்கள்
*****
துவராகபதி விநாயகர் திருக்கோவில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ,விவேகானந்த கேந்திரம்,மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், விவேகானந்த நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை,காந்தி மண்டபம், சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், நாகராஜகோவில்பத்மநாபபுரம் அரண்மனை,, சிதறால் நினைவுச் சின்னம்,மாத்தூர் தொட்டில் பாலம், உதயகிரிக் கோட்டை,உலக்கை அருவி,பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணைக்கட்டு, முக்கூடல் அணைக்கட்டு,திற்பரப்பு நீர்வீழ்ச்சி, சொத்தவிளை,முட்டம் கடற்கரை,தேங்காய்பட்டணம் கடற்கரை, ஆலஞ்சி கடற்கரை,சாமிதோப்பு பதி இதைப் போன்ற எண்ணில் அடங்காத இடங்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
குறிப்பிடத்தக்கவர்கள்
*****
மகாராஜன் வேதமாணிக்கம்,அய்யா வைகுண்டர், ஆதங்கோட்டாசன் ,மார்ஷல் நேசமணி,ஏ,கே,செல்லையா,என்,எஸ்,கிருஷ்ணன்,கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை,குமரி முத்து,பா,ஜீவானந்தம், பாவலர்,பி,தாணுலிங்க நாடார், தொல்காப்பியர், தோவாளை சுந்தரம் பிள்ளை,தமிழிசை செளந்தர இராஜன்,சதாவதானி செய்குத்தம்பி பாவலர் போன்றோர் ஆவார்கள்
குமரி மாவட்ட உள்ளுர் விடுமுறை
*******
புனித சவேரியார் தேவாலயம் தேர் திருவிழா காண உள்ளூர் வெளியூர் பக்தர்கள், தக்கலை பீர்முஹம்மது அப்பா தர்கா,ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதம் பெளர்ணமி தினத்தன்று
முகம்மது அப்பாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.நாகராஜகோவில் தேர்த்திருவிழா சுசீந்திரம் கோவில் தேர் திருவிழா மண்டைக்காடு கொடை,சுவாமித்தோப்பு போன்ற நிகழ்வுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது,
காவல்துறை
*****
காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது.
இவரின் கீழ் இரண்டு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் இயக்குகின்றனர், மாவட்டத்தின் பெரிய காவல்துறையாக நாகர்கோவில் மாநகர காவல் துறை உள்ளது, குமரி மாவட்ட காவல் துறை நிர்வாகம் 4 துணை பிரிவுகளாக இயங்குகிறது,7 தீயணைப்பு நிலையங்களும் உள்ளன.
முடிவுரை
****
நன்செய் புன்செய் பயிர்கள் விளைகின்ற முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டத்திற்கு ஒரு முறை வருகைத் தாருங்கள் கண்டு பயன் அடையுங்கள் .
^ குமரி எங்கள் குமரி
கண்டு இரசிக்க ஒரு கண் போதாது ஆயிரம் கண்கள் வேண்டும்^
வாருங்கள் பார்த்து மகிழுங்கள்
ம.செ.அ.பாமிலா பேகம்
3/73-15, பிஸ்மி நகர் முதல் தெரு,
காந்திபுரம் மெயின் ரோடு,
பறக்கை, 629601,
கன்னியாகுமரி மாவட்டம்,
அலைபேசி 9488759967