Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

செல்போன் வரமா?  சாபமா?
மூமினா பேகம் Sep 29 2024 இளையோர் நலன்

செல்போன் வரமா? சாபமா?



☎ஆரம்பக் காலத்தில் ஊருக்கு ஒரு போன் இருந்தது

அதில் பேசுவதே அபூர்வமாக இருந்தது.


☎️ வெளிநாட்டில் வாழும் தம் இரத்த உறவுகளுக்குப்

பேச வேண்டும் என்றால் அதற்காக வெகுதூரத்தில் இருக்கும் ஊருக்குக் குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் சென்று பேசும் காலம் இருந்தது


☎️ அதன்பின் தெருவில் ஒரு வீட்டில் ஒரு போன் இருக்கும்

அதில் நமது உரையாடல்கள் நடக்கும்



☎️ அதன்பின் சிறிய அளவில் nokia போன் வீட்டில் ஒருவரிடம் இருந்தது 

அதில் பேசுவதற்கு, அதை எப்படி உபயோகிப்பது என்று வீட்டில் ஒருவருக்கு மட்டும்தான் தெரியும்


மற்றவர்களுக்கு அதை உபயோகிக்கத் தெரியாது

கொஞ்சம் கொஞ்சமாக நாம் அதைக் கற்றுக் கொண்டோம்.


☎️ விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் வீட்டில் இருக்கும் அனைவரின் கைகளிலும்

செல்போன் தவழ ஆரம்பித்தது


☎️ அதன் பின் touch போன் மெல்ல மெல்ல எல்லாக் கைகளிலும் தவழ ஆரம்பித்தது

இப்போது ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும்

அத்தனை பேர் கைகளிலும் இருப்பது செல்போன்.


☎️ ஆனால் டச் ( touch) போன் தற்போது மிகுந்த  ஆபத்தானதாக மாறி இருக்கிறது. 

அது ஒரு கத்தி போன்றது.  

சமையலறையில் உள்ள கத்தியைக் காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம்

ஆளைக் கொலை செய்யவும் பயன்படுத்தலாம். அதை நாம் பயன்படுத்தும் முறையில்தான் இருக்கிறது.  


☎️ அந்த செல்போனை இப்போது

இளைஞர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்


☎️ பெண்கள் செல்போனால் கெட்டுச் சீரழிந்து சின்னா பின்னமாகிறார்கள், 


☎️ ஆனால் செல்போனை நல்ல முறையில் பயன்படுத்துவோருக்கு இது நல்லதொரு சாதனம். 


☎️ எனவே இனிவரும் காலங்களில் செல்போனை நல்ல முறையில்

பயன்படுத்தி அதன் மூலம் நன்மைகளை அடைய முயல்வோம்.