பெண்மையை போற்றுவோம்
******************
வீர மங்கைகள்
****************
முன்னுரை
************
பெண்கள் நாட்டின் கண்கள்.பெண்மையை
போற்றுவோம்.கல்வி இல்லா பெண் களர் நிலமே கல்வி கற்று பெண் இன்று விண்ணில் பறக்கிறாள்
சங்க கால பெண்கள் புலவராக இருந்து சிறப்பு செய்தனர் ஓளவையார் பொன் முடியார் நன்முல்லையார் போன்ற புலவர்கள்
தற்போது எண்ணற்ற சாதனையாளர்கள் உள்ளனர் அவற்றை பற்றி பார்ப்போம்.
வீரமங்கை வேலு நாச்சியார்
**************
இளமையிலே வீரமும் விவேகமும் நிரம்பியவள்.ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரமங்கை .கலைகள் பலவற்றையும் கற்றறிந்த துணிச்சலான பெண்மணி.ஹைதர் அலி உதவியோடு படையைத் திரட்டி ஆங்கிலேயரிடமிருந்து
சிவகங்கையை மீட்டு
ஆட்சி பீடத்தில் அமர்ந்த
வீரமங்கை வேலுநாச்சியார்
ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்
****************
செய்யும் தொழிலே தெய்வம்.....
திறமை தான் நம் கடமை.......
செவிலியர் தொழிலை தெய்வமாக மதித்து வங்க மங்கை.
மின் விளக்கு வசதியில்லாத காலத்தில் கையில் மண்ணெண்ணெய்
விளக்கை ஏந்திக் கொண்டு ஒவ்வொரு நோயாளியையும் பார்த்து அவர்களுக்கான
சிகிச்சையை செய்து வந்தாள்.
கை விளக்கு ஏந்திய காரிகை......
தீபம் ஏற்றிய சீமாட்டி.....
உலகமெல்லாம் போற்ற பட்ட இந்த மங்கையின் சேவையைப் பாராட்டி இங்கிலாந்து அரசு அவருக்கு ORDER OF MERIT என்ற விருதினை கொடுத்து கெளரவித்தது
ஐடால் சோபியா ஸ்கட்டர்
***************************
பெண்கள் மருத்துவராவதை விரும்பாத மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவராகி
தமிழகத்திற்கு வந்து வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்
உபாசனா மகதி
******************
பார்வை அற்றவருக்காக இந்தியாவின் முதல் வாழ்வியல் இதழை நடத்தி வந்தார்.பிரெய்லி முறையில் வாசிக்கக் கூடிய இந்த இதழின் உரிமையாளர் ஆசிரியர் போர்ப்ஸ் பத்திரிகையின் முப்பது வயதுக்கு உட்பட்ட சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்தவர் உபாசானா
ஸ்ம்ரிதி மந்தானா
*********************
2017 மகளிர் உலக கோப்பையில் அதிக ரன் குவித்து இந்தியாவை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்ற இளம் மங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனையும் ஆவார்
P.V. சிந்து சாய்னா நெக்வால்
***********
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பேட்மிண்டன்
இந்திய பெண்மணி
ஈ.தா.இராஜேஸ்வரி அம்மையார்
****************
தமிழ் இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்
திருமந்திரம் தொல்காப்பியம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார்
சூயியன் . பரமாணுப்புராணம்
போன்ற அறிவியல் நூலை எழுதியுள்ளார்
முடிவுரை
***********
உலகம் போற்றும் பெண்ணாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்
பெண்களின் பங்கு நாட்டிற்கு கிடைக்கும் போது நாடு முன்னேறி வருகிறது பெண்களைப் போற்றி இக்கால பெண்ணும் சாதனை பெண்மணியாக திகழ வேண்டும் வீர மங்கைகளைப் போற்றுவோம் பாராட்டுவோம்.....
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்