Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பள்ளிப் பருவம்
ம.செ.அ.பாமிலா பேகம் Oct 06 2024 வாழ்வியல்

பள்ளிப் பருவம்

பள்ளி பருவம்

***

பள்ளி பருவம் அழகானது அழகாக்கியது


தோழிகளோடு அரட்டை அடித்த நாள்கள்


போகும் வழியில் மாங்காய் திருடியது


பங்கீட்டுக் கொடுத்து மகிழ்ச்சி காண்பது


ஆசிரியர் புத்தகத்தில் சிவப்பு மையால்


நன்றுயென எழுதி கொடுத்ததுப்  பார்த்து


மகிழ்ச்சிப் பொங்குவது புத்தகத்தின் இடையில்


மயில் முடி வைத்து தினமும்


குட்டிப் போட்டதா என பரவசத்தோடு காண்பது


தேநீர் இடைவேளையின்  போது பக்கத்தில்


அமருபவனின் உணவுப் பொட்டலத்தை திருடி


தின்பது நெல்லிக்காய் மாங்காய் எல்லாம்


சுவைத்த நாள்கள் மணி அடித்தவுடன் இறுதியில்


பள்ளி சென்ற நாள்கள் மஞ்சள்


பையோடு கிறங்கி சென்ற நாட்கள்


மழையில் நனைந்து கொண்டே வந்து


ஈரத்துணியோடும்  புத்தகப் பையும நனைந்து


அம்மாவிடம் அடி வாங்கிய நாட்கள்


மாலையில் தோழிகளோடு விளையாடிய நாட்கள்


அமரும் இருக்கையில் பெயரை கிறுக்கியது


கலர் கலராய் சவ்வு மிட்டாய்


நாவிற்கு சுவையாய் சுவைத்த நாட்கள்


ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கி


முதல் மதிப்பெண் எடுத்த தருணம்


காலங்கள் சென்றாலும் மீண்டும் அந்த


பருவம் வருமா என்ற ஏக்கத்தோடு


தினமும் எதிர் பார்த்து நிற்கிறோம்


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்