விழித்திறக் கலாம்
****
ஏவுகணை நாயகனே எட்ட முடியாத அதிசயமே
இளைஞர்களை எல்லாம் திரும்பி பார்க்க
சொன்ன அறிவியல் மேதையே நாளும்
குழந்தைகளோடு மகிழ்ந்து கதை பேசிய
கனவுகள் எத்தனை எத்தனை அத்தனையும்
நீ இல்லாமல் காணாதுப் போனாது
உனது மெளனத்தின் முன் யாராலும்
வெல்ல முடியாதே சாதித்துக் காட்டிய
சகாப்தமே உலக தமிழனின் தலைவனே
இளைஞர்களுக்கு நல்ல வழிக்காட்டி ஆனாய்
கல்லூரிக்கு சென்று மாணவ மாணவிகளோடு
உரையாடல் நடத்திச் சென்று புகழும்
பெற்று பார் முழுவதும் வந்தாய்
அக்னி சிறகோடு ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்தாய்
உன்னைப் போல் யார் உளர்
மண்ணின் மைந்தன் துயில் கொண்டாலும்
உன்னை விட மாட்டோம் விழித்
திறந்து எங்களோடு
மீண்டும் பேசிடு
புதிய பிறவியாய் பொங்கி எழுந்திரு
நாளும் உன் நினைவுகளோடு ஏங்குகிறோம்
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்