தென்றல்
***
தென்றல் காற்று மனதை வருடியது
தென்னையும் பாட்டு பாடி மகிழ்ந்தது
தெற்கே பறவைகள் வானில் பறந்தது
தெம்மாங்கு பாடலை உழவன் இரசித்தது
தென்கிழக்கு பருவக்காற்றும் சேதி சொல்லியது
தெற்கத்தி பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது
தெவிட்டா இனிமையோடு மனம் குளிர்ந்தது
தெப்பகரை ஓரம் சில்லென சிலிர்த்தது
தெங்கையும் பார்த்து கதை பேசியது
தெள்ளாத மனமும் மயங்கி நின்றது
தெவிட்டா இனிமையை தந்துச் சென்றது
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்