சென்னை: அக் 21
நள்ளிரவு நேரம்,மெரினா கடற்கரை, அங்கு நிறுத்தி இருந்த காரை எடுக்கச் சொன்ன ரோந்து காவலர்.செவனே எனக் காரை எடுத்துப் போகியிருந்தால் இவ்வளவு அசிங்கம் தேவையில்லை. அவ்வளவுதான் குடிபோதையில் இருந்த ஆணும், பெண்ணும் ஆக்சனோடு மிரட்டிய வீடியோ.சமூக வலைத்தளங்களில் ஜெட் வேகத்தில் பரவியது.
ஒரு சினிமாவில் விவேக் அவரை எனக்குத் தெரியும்.பட் அவருக்கு என்ன தெரியாது என்பதுபோல இருந்த காட்சிகள்.குறிப்பாக நான் உதயநிதி ஸ்டாலினை இங்கையே கூப்பிடுவேன் பாக்குறியா..
உன்னால் முடிந்ததை பாரு .. நான் குடித்துத்தான் இருக்கிறேன்.. என்னால் காரை எடுக்க முடியாது.. நாளை காலையில் உங்கள் அட்ரஸ் எடுத்து எல்லாத்தையும் தண்ணீரில்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன்.. வையாபூரி மாதிரி இருக்க நீ என்ன செல் வைச்சியிருக்குர.. நான் இரண்டு லட்சம் செல் வைச்சிவுள்ள ஆள்..நல்ல வீடியோ எடுத்துக்கோ..எனப் போட்ட ஆட்டம். அவதூறாகப் பேசிய வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியது.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் கஞ்சா,மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்படுத்தும் புழக்கம் காரணமாகப் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் போலீசார் மிகவும் பாதிப்படைகின்றனர்.
மது போதையில் அல்லது கஞ்சா போதையில் சாலைகளில் சுற்றித் திரியும் இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டால் அவர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது என அத்துமீறல்கள் அமைதி தமிழகத்தில் தற்போது காணும் காட்சியாகத் தொடர்கின்றன.
போலீசாரின் பாதுகாப்பும் இது போன்ற நிகழ்வுகளால் கேள்விக்குறியாகி உள்ளது. நானும் ரவுடி தான் எனப் மிரட்டுவது, அரசியல்வாதிகளின் உறவினர்கள் என மிரட்டுவது எனப் அத்துமீறல் சம்பவங்கள் போலீசாருக்கும் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
காரை எடுத்துச் செல்லும்படி ரோந்து போலீசார் கூறியுள்ளார். அவ்வளவுதான் அப்போது கணவன்,மனைவி போல் இருந்த இருவரும் போலீசாரை மிக இழிவாகப் பேசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டனர். மேலும் "நீங்கள் யார்" என இருவரிடமும் விசாரிக்கும் போது இருவரும், "என்னை வீடியோ எடுக்கிறீர்களா? இந்த போஸ் போதுமா.. இந்த போஸ் போதுமா..என கேள்வி கேட்பதும். கண் அருகில் இரு விரல் காட்டி வீடியோ எடுத்துக்கொள் எனக் கேலி கிண்டல் செய்தனர். பின்பு அங்கு இருந்த இருவரையும் ரோந்து போலிசார் வெளியேற்றினர்.
இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த இருவரும் கணவன் மனைவி இல்லை, கள்ள ஜோடிகள் என்பது தெரிய வந்தது. இருவரையும் தனியார் விடுதியில் வைத்து கைது செய்த காவல்துறை தற்போது தான் மதுபோதையில் பேசியதாகக் கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார். இது போன்ற மன்னிப்பைக் கேடயம் ஆகப் பயன்படுத்தி குற்றச்செயலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்பதாகவே தமிழக மக்களின் விருப்பமாகும்.
இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.