Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

காலை மழைத்துளி..!!!
பொதிகை இன்பச் சோலை K. பெனாசீர் Oct 23 2024 கலை இலக்கியம்

காலை மழைத்துளி..!!!

* என் வீட்டுக் கூரையின் நுனியில் தவழ்ந்து ஓடும் பனித்துளியே! உன்னை ஏந்த என் கைகள் தவம் கொள்கிறது..!!


* உன் அழகோ அள்ளிக் கொடுக்கும் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள்..!!


* வயல்வெளியின் வர்ணச் சோலையே நெற்கதிரின் மேல் வைரமாய் ஜொலிக்கும் பற்பல முத்துக்கள்..!!


* மனதிற்கு இன்பமாய் குளிரும் மின்மினி பூக்கள்..!! உன்னைக் கண்டாலே அத்தனை கவலைகளும் பறந்து போகும்...!!!


* நான் வளர்க்கும்  ரோஜாவோ அழகு.!! அந்த அழகுக்கு  அழகு சேர்க்கும் வர்ணமாய்  ஒரு துளி நீர்தானோ..!!!


* இயற்கையின் வர்ணமே உன்னை கொடுத்து எங்களை மகிழ்விக்கும் இயற்கை தாயே உன்னை போற்றுகிறேன்...!!!


* செடியும் கொடியும் ஜொலி ஜொலிக்கும் உன்னாலே..!!! மலர்களும் மொட்டுக்களும் உன்னால் நறுமணம் கொள்கின்றன..!!!!


* பல லட்சம் கார் கண்ணாடியோ..!! உன் அழகு துளிகளால்  ஜொலிக்கின்றன..!! மழைக் காலங்களின் இளவரசி விலைமதிப்பில்லா வைடூரியம் இவள் தானோ...!!!


* உன் வருகையால் மண்வாசனை நறுமணம் கண்டேன்...!!! பூக்களின் அழகைக் கண்டேன்...!!! காற்றும் கூட என் மீது ஒரு துளி விழுமா என்று ஏங்கும் தருணம் ஆஹா அழகோ அழகு...!!!!


* சிலு சிலுவென்று பொழிகின்றாய் எங்கள் கவலைகளை உடைக்கின்றாய்...!! மழலைகளின் இன்பச் சோலை நீ...!!!


* பசுமையான சோலைகளுக்கு பனித்துளியாய் உழவர்களுக்கு உயிர் துளியாய் திகழ்கின்றாய்....!!! என் கருப்பு கொடையின் மேல் அழகிய முத்து நகையே...!!!!


* யாரும் இல்லா இடத்தில் நின்று உன் மீது காதல் கொண்டேன்..!!! மழை பொழிந்து முடிந்தும் ஈரம் சுட்டி நிற்கும் நீ வந்த பாதையை நோக்கி...!!!! மீண்டும் உன் வருகைக்காக ஏங்கும் ஒரு ஜீவன்....!!!