Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

யார் மீது குற்றம் ??  PART 1
KALEEL RAHMAN Oct 23 2024 அண்மைச் செய்திகள்

யார் மீது குற்றம் ?? PART 1

யார் மீது குற்றம் ??


ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி


தனது பஜர் தொழுகை முடித்துவிட்டு  காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார் ஆயிஷா. தனது மகன் யாசினிற்கு பிடித்த மட்டன் இடியாப்பத்தை செய்து டைனிங் டேபிள் மீது வைத்துவிட்டு மகனை  எழுப்ப பெட்ரூமிற்கு செல்கிறார். "டேய் யாசின் சீக்கிரம் எந்திரி மணி 9 ஆயிடுச்சு டேபிள்ல உனக்கு பிடித்த முட்டை இடியாப்பம் செஞ்சு வச்சிருக்கேன் போய் சாப்பிடு "என்று சொல்லிவிட்டு சென்றுவிட கட்டிலை விட்டு எழுந்த யாசின் பல் துலக்கி விட்டு , உடையை மாற்றிக்கொண்டு தனது அம்மாவிடம் எதுவும் பேசாமல் அம்மா மீது கோபம் கொண்டவனாய் நண்பர்களை பார்க்க வெளியே சென்று விடுகிறான். ஏதாவது சாப்பிட்டு விட்டு போடா என்று அம்மா எவ்வளவு சொல்லியும் அவன் தனது அம்மாவின் பேச்சை கண்டு கொள்ளாதவனாக வெளியே சென்று விடுகின்றான்

 

காலை 9மணிக்கு மார்க்கெட் சென்று விட்டு வந்த ஆயிஷாவின் அண்ணன் கனி "என்ன ஆயிஷா கால சாப்பாடு என்ன செஞ்ச" எங்க மருமகனை காணோம் ?எங்க போயிட்டான் கிரிக்கெட் விளையாட வா" என்று கேட்க ஆயிஷாவோ "காலையில இருந்து என் மேல கோவமா இருக்கான் எதுமே பேசலாண்ணே " என்று சொல்ல ஏன் என்னாச்சு ஏதும் பிரச்சனையா என்று கனி ஆயிஷாவிடம் கேட்க , ஆமா அண்ணே ரெண்டு மூணு நாளா அந்த KTMபைக்கு வாங்கி கேட்டு ஒரு தொல்லை பண்ணிட்டே இருக்கான் இப்ப காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறேன் இப்ப கூட வாங்கி தர மாட்டீங்களா ஃபர்ஸ்ட் வருஷம் கேட்டப்ப "அடுத்த வருஷம் வாங்கி தரேன்னு சொன்னீங்க" அப்படின்னு கோவமா சொல்லிட்டு நேத்து நைட்டும் சாப்பிடல காலையிலிருந்து சாப்பிடாம போயிட்டா கஷ்டமா இருக்குன்னு ஆயிஷா சொல்ல


.அதற்க்கு மாமா கனியோ "ஆமாமா அவனும் பெரிய பையன் ஆயிட்டான் கூட இருக்க பிரண்ட்ஸ் எல்லாரும் பைக் வச்சிருக்காங்க எங்க தெருவுலயே நாலு பசங்க பைக் ஓட்டிட்டு போறத பார்த்து இருக்கேன் அப்ப அவனுக்கு ஆசை வரத்தான் செய்யும் ஒரு பைக்கை தான் வாங்கி கொடுத்திடுமா ஒரு பையன் தானே வச்சிருக்கீங்க " என்று கனி சொல்ல அதற்க்கு ஆயிஷாவோ அவங்க அத்தாகிட்ட நான் போன் பண்ணி கேட்டா அவங்க கோவப்படுறாங்க "பைக் ஓட்டுற வயசு இது இல்லன்னு " சொல்லிட்டு அவங்க என்னையும் திட்டிட்டாங்கன்னு ஆயிஷா சொல்ல அதற்கு கனியோ குவைத்தில் இருக்கிற அவருக்கு என்னம்மா இங்கே இருக்குற சூழ்நிலை தெரியும் "பசங்கள வளக்குற பாடு நமக்கு தான தெரியும் ஒரு பையனை பெத்து வச்சுக்கிட்டு அவன் ஆசைப்படுற எதையும் செய்யாம இருந்தா எப்படி" என்று கேட்க அதற்க்கு ஆயிஷாவோ என்கிட்ட இப்ப வெறும் 30 ஆயிரம் ரூபாய் தான் இருக்கு ஆனா அவன் கேக்குற KTMபைக் ஒரு லட்சத்துக்கு மேல சொல்றாங்கன்னு ஆயிஷா சொல்ல "அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ முப்பது ஆயிரத்தை கொடு நான் இருபதாயிரம் போட்டு ஐம்பதாயிரத்துக்கு செகண்ட் ஹேண்டில் பைக் வாங்கி தரேன் என்று கனி சொல்ல ,சாயங்காலம் வந்த மருமகனை சமாதானப்படுத்திய கனி விட்றா நம்ம நாளைக்கு போயி உனக்கு புடிச்ச பைக்கை வாங்கலாம்னு சொல்ல யாசினோ சந்தோசம் கொண்டவனாய் உறங்கப்போனான் . பைக் வாங்குவதற்கு திங்கள்கிழமை காலை ஆட்டோவில் ஆயிஷா ,கனி ,யாசின் மூவரும் பக்கத்து ஊரில் இருக்கும் டவுனுக்கு சென்று KTM பைக் ஷோரூமில் உள்ள அனைத்து பைக்களையும் பார்வையிட அவர்கள் அருகில் வந்த மேலாளர் குமரேசன் "என்ன சார் யாருக்கு பைக்" என்று யாசின் தோளின் மீது கை வைத்து கேட்க அதற்க்கு கனி "தம்பிக்குதாங்க காலேஜ் போறதுக்கு நல்ல பைக்கா பார்க்கிறோம்" என்று சொல்ல அதற்க்கு குமரேசன் " இந்த பைக்கை தான் சார் இப்ப ட்ரெண்ட் புல்லிங் பவர் அதிகம், என்று ஒரு புதிய மாடல் பைக்கை காமிக்க "எவ்வளவு சார்" ஆகும் என்று கனி கேட்க இது மொத்தம் டாக்ஸ் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வரும் சார் என்று குமரேசன் சொல்ல அதற்கு கனியோ "சார் எங்களோட மொத்த பட்ஜெட்டே அம்பதாயிரம் தான் சார் அதுக்குள்ள ஏதாவது நல்ல பைக்கா காமிங்க என்று சொல்ல சார் அந்த பணத்தை குடுங்க என்று கையில் வாங்கிய குமரேசன் மீண்டும் அதிலிருந்து 20,000 ரூபாயை கனியிடம் திருப்பிக் கொடுக்க சார் நீங்க 30,000 மட்டும் கொடுத்தால் போதும் சார் மீதி மாசம் 5000 ரூபாய் வச்சு 15 மாதம் கட்டுனா போதும் . இது வட்டியில்லாத கடன் சார் என்று குமரேசன் சொல்ல அவரின் பேச்சை கேட்ட யாஸீன் எனக்கு இந்த பைக்குத்தான் வேண்டும் என்று அடம்பிடிக்க இறுதியில் யாஸீன் கேட்ட புது மாடல் பைக்கை புக்கிங் செய்துவிட்டு கனியும் ,ஆயிஷாவும் வீடு திரும்ப, வரும் வழியிலேயே "மாமா பைக்க எப்ப டெலிவரி பண்ணுவாங்க " என்று யாஸீன் கேட்க இரண்டு நாள் ஆகும் என்று கனி சொல்ல சந்தோஷத்தில் மிதக்கிறான் யாஸீன் .


இரண்டுநாட்கள் கழித்து வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஷோரூமிலிருந்து ஆட்கள் வண்டியை டெலிவரி செய்ய கல்லூரி முடிந்து வந்த யாஸீன் தனது பைக்கை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறான் . அவன் அருகில் வந்த மாமா கனி "டேய் யாஸீன் உங்க த்தாவோட பேச்ச மீறி வாங்கிருக்கோம் , பாத்து கவனமா ஒட்டணும்னு " சொல்ல "அதெல்லாம் நா மெதுவாத்தான் போவேன்னு "யாஸீன் பதில் கூற மறுநாள் காலை 8 மணிக்கு (தொடரும் )


Related News