2024 அக் 31
பாபர் மசூதியை இடித்து முஸ்லிம்களிடமிருந்து RSS கும்பல் இடத்தை அநீதியாக அபகரித்துக் கொண்டது.மசூதி இடத்தில் ராமர் பிறந்தார் என்கிற RSS கட்டுக்கதைகளை இந்து மக்களின் நம்பிக்கையாக வைத்து வழங்கப்பட்ட தீர்ப்பு உச்சநீதி மன்றத்தின் நம்பிக்கையைச் சாமானிய மக்களிடத்தில் இழக்கச்செய்தது.
இதனையடுத்து 50-ஆவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற சந்திரசூட், அவரிடத்தில் முற்போக்கு எண்ணங்கொண்ட குடிமக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளில் அக்கறை உள்ளவராக மக்கள் பார்க்க தொடங்கினார்கள்.
நீதிபதிகள் பேசுவதில்லை, அவர்களின் தீர்ப்புகளே பேசுகின்ற சட்டங்களாக அமைகின்றன,என்பதைப்போன்று சந்திரசூட் அவருடைய பதவி காலத்தில் வழங்கிய தீர்ப்புகள் அவரை இந்திய மக்கள் மத்தியில் முன்மாதிரியான நீதிபதியாக அடையாளப்படுத்தி வந்தது. இவர் தலைமை நீதிபதியாகப் பதவியில் இருந்தபோது மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டும்.
மதச்சார்பற்ற மாண்புகள்,மீண்டும் நிலை நாட்டப்படும், மனித உரிமை மீறல்கள் பாதுகாக்கப்படும்’ என்று இந்திய மக்களிடத்தில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியது.
இதற்கு வலுச் சேர்க்கும் விதமாகவே நீதிபதி சந்திரசூட் கலத்துகொண்ட கருத்தரங்குகளில் பத்திரிக்கை சுதந்திரம், ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசிவந்தார்.
இவர் பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு வரை ஏராளமான தேங்கிக் கிடந்த வழக்குகளை முடித்து வைத்ததும் இவரின் சாதனையாகும்.
நிலுவையில் இருந்த தேர்தல் பத்திரம் வழக்கில் இந்திய மக்கள் பாராட்டும் விதமாக, தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது, இந்தத் திட்டம் சட்டவிரோதமானது என்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. இதனால் உச்சநீதி மன்றத்தின் மீது நம்பிக்கைகள் மீண்டெழுந்தது. ஆனால் அதுவும் இந்திய மக்களுக்கு நீடிக்காமல் தற்போதும் போகிவிட்டது.
காரணம் இவற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களாகச் சட்ட விரோதம் எனக் கூறப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம். இதன் மூலம் கட்சிகள் பெற்ற பணத்தைப் பறிமுதல் செய்து அரசிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்காமல் போனதும்.
அப்படிக் கோரிய வழக்கையும் தள்ளுபடியும், அடுத்து அதானி மீதான பங்குச் சந்தை மோசடி வழக்கு நீர்த்துப்போகச் செய்தும், இப்படியாகப் பல வழக்குகளில் பாதிக் கிணற்றைத் தாண்டினார் நீதிபதி சந்திரசூட்.
அது ஏன் என இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாபர் மசூதி இஸ்லாமியர்கள் வசம் இருந்ததற்குத் தகுந்த ஆவணங்கள் இல்லை என்று கூறிய நீதிமன்றம். ராமர் இங்கு தான் பிறந்தார் என RSS அமைப்பு மட்டுமே கூறியது.ஆனால் இந்துக்கள் நம்புவதாகவும் அவர்களுக்கே அந்த இடத்தை வழங்குவதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் எனக் கூறியும், இஸ்லாமியர்களுக்கு வேறொரு இடத்தில் நிலம் கொடுக்க தீர்ப்பும் வழங்கப்பட்டது.
இஸ்லாமியர் தங்களது உரிமையை நிலை நாட்ட ஆவணங்கள் வேண்டும், ஆனால் இவர்கள் கோரும் உரிமைக்கு நம்பிக்கை மட்டும் போதும் என்றது உச்சநீதிமன்றம். இடப் பிரச்சினையை ஆவணங்கள், சான்றுகளைக் கொண்டே தீர்க்க வேண்டும்.அதுவே இந்திய அரசியல் சாசனம் கூறும் சட்ட வழியாகும்.
இந்தத் தீர்ப்பை மூன்று மாதங்களாக ராமர் கடவுள் விக்கிரகத்தின் முன் அமர்ந்து அயோத்தி வழக்கை முடித்து வைக்க அந்தக் கடவுள் உதவவேண்டும் என வேண்டினேன். என்னுடைய நம்பிக்கை வீண்போகவில்லை என்று நீதிபதி சந்திரசூட் கூறி அதிர்ச்சியை அளித்துள்ளார்.
தான் எழுதிய தீர்ப்பு நம்பிக்கை மட்டுமே போதுமானது அதற்குச் சான்றுகள், ஆவணங்கள் தேவையில்லை என்பதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தன் பதிவிகாலம் முடியும் தறுவாயில் கூறிய வார்த்தையும். தனது இல்லத்தின் கணேஷ் பூஜைக்குப் பிரதமர் மோடியை அழைத்தும் நெருக்கம் காட்டினார்.
இன்றைய மனிதர்களிடத்தில் கானமுடியாத முக்கிய பண்புகளில் ஒன்று நீதி செலுத்துவது அதில் நீதிப(க்)தி சந்திரசூட் அவர்களும் விதிவிலக்கானவர் அல்ல என்பதும், இந்து மத நம்பிக்கை தனக்கு அதிகம் இருப்பதை இந்திய மக்களுக்கு கிளைமேக்ஸாக வெளிப்படுத்தியுள்ளார்.