*بسم الله الرحمن الرحيم*
" **மனித, குல மாணிக்கங்களை உருவாக்கும்* *மகளிர்க்கான மார்க்க* *கல்வி*
يوى الحكمة من يشاء و من يؤت الحكمة فقد اوقى خيرا كثيرا
(அல்லாஹ்) தான் நாடியவர்களுக்கு மார்க்க ஞானத்தை கொடுக்கிறான். அவ்வாறு மார்க்க ஞானம் கொடுக்கப்பட்டவர் அநேக நற்பேறுகள் பெற்றவராவார்.
*ஞானமும் கல்வியும் -*
ஞானம் -அறிவு என்னும் ஆற்றல் எல்லாப் படைப்புக்குள்ளும் இறைவனால் பொருத்தப்பட்ட பேராற்றல்..! ஏனைய அனைத்துப் படைப்புக்கும் அவற்றின் வாழ்வியலுக்குத் தேவையான அறிவுத் தேடல், கற்றலின்றி இயற்கையாகவே வெளிப்பட்டுவிடுகிறது. பறவைக்குப் பறக்கவோ மீனுக்கு நீந்தவோ, வித்துக்கு முளைக்கவோ விண்மீனுக்கு வானில் வழுவாது வலம் வரவோ சிறப்புக் கல்வி தேவையில்லை .ஆனால் சுவர்க்கம் நரகம் என்ற மறு உலக வாழ்வுக்குள் மீள முடியாது கட்டுப்பட்ட மனித வாழ்வியலுக்கு ஞானம் (அறிவு) சுடர்விட புறக்கல்வி அவசியம். உலகியல் ரீதியாக இருந்தாலும் சரி ஆன்மீக ரீதியாக இருந்தாலும் சரி வாழ்வு சீரடைய கல்வி அவசியம் .
*طلب العلم فريضة على كل* *مسلم ومسلمة*
கல்வியைத் தேடிக் கொள்வது ஆண் பெண் ஆகிய இரு சாரார் மீதும் கட்டாயக் கடமையாகும்.
கல்வியைத் தேடுதலை இஸ்லாம் பர்ளான கடமையாகவே
ஆக்கியுள்ளது. அதிலும் கல்வியை கற்றல் என்பதோடு முடிக்காமல் தேடுதல்"என அதைத் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை, உணர்த்துதிறது...
*பயன் தரும் கல்வி* :-
எல்லாக் கல்வியுமே பயன் தருபவை தான் என்றாலும் .. முழு பயன் தரும் கல்வி எது? என்ற கேள்வி எக்காலமும் உண்டு . அதிலும் தீமைகள் தலைவிரித்தாடும் தற்கால சூழ்நிலையில் இது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது
வானில் பறந்து திரியும் பறவைகளின் அறிவு நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ மனிதனுக்கு பயனைத் தான் தருகிறது. அவற்றின் மூலம் நிகழும் மகரந்தச் சேர்க்கை அழுகிய உடல் துகள்கள் பூமியிலிருந்து தூய்மையாதல் எச்சத்தின் மூலம் கூட விதைகள் பரவி தாவரங்கள் பெருகுதல், உணவு எனப் பல பயன்கள் உண்டு ஆனால் தனக்கு உணவு கிடைக்க
வேண்டு மென்பதற்காக நெருப்பைக் காடுகளில் பரவ வைத்து காடுகளையே அழித்து பெரும் சேதம் விளைவிக்கும் பறவைகளை
நீங்கள் கேள்விப்பட்ட துண்டா?
நபிகள் நாயகம் صل الله عليه وسلم அவர்களும் இப்பறவையைக் கண்டால் கொன்று விடுங்கள் என்று எச்சரித்துள்ளார்கள். சமீப காலத்தில் ஆஸ்திரேலியாவில் பொருள் மற்றும் மனித இழப்புகளை ஏற்படுத்திய காட்டுத் தீ பரவ இப்பறவைகளின் சுயநலம் சார்ந்த அறிவு காரணம் என ஆய்வுகளும் கூறுகின்றன.
இதே, போன்ற பணம், பெருமை, புகழ் வாழ்வாதாரம் இவற்றையே நோக்கமாகக் கொண்டு சுயநலக் கல்விக்கட்டமைப்பு" உருவாக்கப்பட்டதன் விளைவை நாம் தற்காலத்தில் கண் கூடாக பார்க்கிறோம்.
எந்த துறையிலும் நேர்மை கட்டுப்பாடு தியாகம் ஒழுக்கம் எந்த
நற்குணங்களையும் காணமுடியவல்லை . தினசரி நம்மை அடையும் செய்திகள் *மனிதம்* இந்த உலகை விட்டு மறைந்து விட்டதா.?. இனி அதனைக், காட்டு மிருகங்களிடம் தான் தேட வேண்டுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. அரசியல், கல்வியியல், மருத்துவம்.....என எல்லா ''இயல்களையும் சீர் செய்யும் ஆன்மீகவியலும் குடும்பவியலும் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது
அன்னை உம்முஸல்மா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கண்மணி நாயகம்
صل الله عليه وسلم
அவர்கள் அதிமாக
*…اللهم إني أسألك علما نافعا*
யா அல்லாஹ் பயன் தரும் கல்வியை நிச்சயமாக நான் உன்னிடம் வேண்டுகிறேன் என்று அதிகம் துவாச் செய்துள்ளார்கள்
*அது என்ன பயன் தரும் கல்வி???*
அதன் பயன்கள் பற்றிக் காணுமுன் அதன் தேவை இன்று யாருக்கு அதிகம் உள்ளது??? என்று ஆராய்வோம்
⭐⭐*பயன்தரும் மார்க்கக் கல்வியும்::::: பெண்ணினமும்* :
சமுதாயம்
சீரடைய மனித வாழ்வு வளம் பெற முக்கியமான காரணி பெண்மை நலம் ! எந்தத் சமுதாயமும் அறிவார்ந்த பெண்கள் நிறைவார்களோ அங்கு ஆண் சமுதாயமும் சிறப்படையும். அல்குர்ஆனும் ஆணை மழையாகவும் (விதையாகவும்) பெண்ணை விளை நிலமாகவுமே எடுத்துக் கூறுகிறது.
எத்தகைய நன்மழை
மொழிந்தாலும் மண் வளமாக இல்லையெனில் அதனால் பயனில்லை.
மண் போன்ற இப் பெண்ணினம் சீர்ப்படுத்தப்பட்டால் தான் மனித வாழ்வு மாண்புறும் .
நபிகள் நாயகம் அவர்கள் வழிகாட்டியப்படி ஷைத்தான்
மனித குலத்தை சீரழிக்க கையிலெடுக்கும் ஆயுதமும் பெண்ணினம் தான்.
தஜ்ஜாலிய யுகத்தில் தன்ணுர்விழந்து அவனுடைய தீய கொள்கையின் பின்னால் ஓடும் கூட்டமும் பெண்ணினமாகத் தான் இருக்கும் இவை வெறும் கணிப்புகள் அல்ல. கடும் எச்சரிக்கைகள்..❗❗
தன் அன்பு மனைவி கதீஜா அம்மையாரிலிருந்து மஸ்ஜிதுன்னபவி கழிவறையைத் தூய்மை செய்த எளிய பெண் வரை பெண்ணினம் கண்ணியம் பெற்றது பெருமானாரின் அழகிய தோழமை வழிகாட்டலில் தானே!
ஒட்டு மொத்த உலகமும் 'பெண்ணினம் "மனித இனம் என்று கூட ஒப்புக் கொள்ளாத நிலையில் தாயின் காலடியில் சுவனத்தையும், மனைவிக்கு ஊட்டும் உணவுக் கவளத்தில் சுவனப் பாதையையும் பெண் குழந்தைகளின் பராமரிப்பில் தன்னோடு கிடைக்கும் சுவனத் தோழமைமையும் மறுமைப் பயன்களாகச் சுட்டிக் காட்டி பெண்மையின் உயர்வை பெருமானார் அவர்கள் சிறப்பித்தார்கள்
*ஆனால் தற்கால நிலை*
அடிப்படைக் கல்வியான மார்க்கக் கல்வியின் பால் ஈடுபாடு குறைந்ததன் விளைவு பெயருக்குப் பின் வரும் சில புள்ளிவைத்த எழுத்துக்களுக்காக சமுதாயக் கரும்புள்ளிகளாக பெண்கள் மாறி வரும் நிலை உருவாகியுள்ளது. தன்னையும் பாதுகாக்க தெரியாமல் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் திறனுமில்லாத "கூமுட்டை கல்வியாளர்களாக பெண்ணினம் உருமாறி இருப்பது எதிர்கால
மனித சமுதாயத்தை தாக்கி அழிக்கும் கொரோனாவை விட மிகக் கொடிய ஆபத்து"
இதைத் தடுக்கும் கேடயங்கள்தான் " *பெண்களுக்கான* *நிஸ்வான்கள்* "
ஒருபுறம் வழிகேட்டிற்கான வாசல்களை வலைத்தளங்கள் மூலம் ஷைத்தான்கள் திறந்து விட்டுக் கொண்டிருந்தாலும்... இறையருளாய் பெண்குலம் சீரடைய பயன் தரும் கல்வி கொடுக்கும் அட்சய பாத்திரங்களாக நிஸ்வான்கள் உருவாகி வருகின்றன.
சரி... அப்படி இந்த நிஸ்வான்கள் கொடுக்கும் கல்வியன் பயன்கள் என்ன? என்று காண்போமா ?.:::
உண்மை கல்வியின் உயரிய பலன்கள்:-*
இலட்சிய கல்வியாக இல்லாமல் இலட்சங்களைத் தேடும் கல்வியாக *கல்வி* மாறியதன் விளைவு "ஆயிரம் பேரைக் கொன்றாலும் என் அரைவயிறு நிரம்பினால் போதும்" என்று பேராசை கொண்ட சமுதாயம் உருவாகியுள்ளது.
போர்களும், அநியாயக் கொலைகளும் உள்ளம்
பதறவைக்கும் வேளையில் ‘பயன்தரும்
கல்வியின் பட்டியல் காண்போமா!
⭐கல்வி மனித குலத்தை படைத்த இறைவனோடு இணைத்து படைப்புகளிடம் மண்டியிடுவதை விட்டும் காக்க வேண்டும் (ஏகத்துவம்)
⭐ கல்வி குறையற்ற மனித குலத்தை, சீர்ப் படுத்தும் உயரிய வழிகாட்டலை காண்பிக்க வேண்டும் (நபி வழி)
⭐இனம், குலம், நிறம், நாடு என பிரிவுகள் சாராத பொதுவான எல்லா வற்றையும் நிர்வகிக்கும் ஒற்றை பேராற்றலிடம் பெறப்பட்ட வழிகாட்டலை போதிக்க வேண்டும் [ *பொதுமறை குர்ஆன்)**
⭐தனி மனித ஒழுக்கம் சிறப்படைய வழி காட்ட வேண்டும்.[இஸ்லாமிய வாழ்வியல்)
⭐ மக்களின் உணர்வுகளை மதிக்கும் மாண்புகளை மனிதப் பண்புகள் ஆக கற்பிக்க வேண்டும் (இஸ்லாமிய தலைமை)
⭐ குடும்ப வியலிருந்தது மரணத்தை தொடரும் பெரு வாழ்வு வரை சிறப்பான
வழிகள் சொல்லித் தர வேண்டும்
⭐ தீமைகள் தடுக்கும் ஆற்றலையும் நன்மை ஏவும் உறுதியும் கற்றுத் தர வேண்டும்.
இவை அடித்தளமாக இவற்றுக்கு மேல் உலகக் கல்வி கட்டமைக்கப்படும் போது தான் சமுதாயம் சிறக்கும். இந்த அடித் தளம் உருவாக்கும் கல்வி நிலையங்கள் தான் மார்க்க கல்விக் கூடங்கள்
*⭐ தாயிடமிருந்து கிடைக்கும் அமுதமான தாய்ப்பால் . ஆண் ,பெண் எனப் பேதமின்றி குழந்தைக்கு உணவாகி உருவாக்குவது போல இக்கல்வி பெண்ணுக்கு அளிக்கப்படும் போது அவள் உள்ளம் ஆரோக்கியமாகி அதனால் ஆண் பெண் ஆகிய இரு சமுதாயமும் பயனடையும். இதில் சந்தேகம் இல்லை (இன்ஷாஅல்லாஹ்)
*பெண்களிடம் மார்க்க கல்வியைத் கொண்டு செல்வோம்*
ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற இரு தண்டவாளக் கோடுகள் மீது தான் சமுதாயம் என்ற இரயில் சென்று கொண்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட குறைகள் விரிசல்கள் தான் சமுதாயம் காணும் விபத்துக்கள். இவை சரிசெய்யப்பட ஒரே வழி இஸ்லாமிய வாழ்வியல்
**ان الدين عند الله الاسلام** ]
அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் (வாழ்வியல்) இஸ்லாம் மட்டுமே.)
"ஹைர உம்மத்தாக மனித குலத்தை நேர்வழியில் வழி நடத்திக் செல்ல வேண்டிய
'உம்மத்தே முஹம்மதிய" வின் 'உம்மாக்கள்? தாய்மார்கள் இச் சீரிய கல்வியினால் வழி காட்டப்பட்டால் மனித குலம் சிறப்படையும் (இன்ஷா அல்லாஹ்)
ஆணினம் முதலீட்டாளர்களாக இருக்கலாம்.
பெண்ணினம் உற்பத்தியாளர்கள்.
முதலீடு பெரிதாக இருந்தாலும் உற்பத்தி தரம் தாழ்ந்தாக எப்படி வியாபாரம் செழிக்கும்.
உலக வாழ்வும் ஒரு வியாபாரமே
*تجارة لن تبور* " !
நட்டமில்லாத வியாபாரமாகவே அல்லாஹ்
நல்வாழ்வை குர்ஆனில்
குறிப்பிடுகிறான்.
சமுதாயக் கண்மணிகளான பெண்களே!
கண் நலம் சிறந்தால் தான் காட்சிகள் தெளிவாகும். உங்கள் தீன் நலம் சிறந்தால் தான் மண்ணுலகம் சிறக்கும் .ஆகவே உலகக் கல்வியே போதுமென எண்ணாது
தீன் கல்வியை நாமும் விளங்கி அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல உறுதி கொள்வோம்:
( இன்ஷாஅல்லாஹ்)