திருவாரூர் நவ 08
அமரன் திரைப்படத்தைத் தடை செய்ய வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் SDPI கட்சி திருவாரூர் மாவட்டம் சார்பாக, மாவட்டத் தலைவர் விலாயத் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது.
இதில் SDPI கட்சி திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மாஸ் அஜிஸ் மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் லத்தீப் மாவட்ட அமைப்புச் செயலாளர் உமர்பாரூக் மாவட்டச் செயலாளர் ஜமீன்,SDTU மாவட்டத் தலைவர் முபாரக்,திருவாரூர் தொகுதி தலைவர் அஜிஸ், நகரத் தலைவர் சவுக்கத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தைத் தமிழ் சினிமாவின் தொடர்ச்சியாக காட்சிப்படுத்தும் நடிகர் கமல்ஹாசனை கண்டித்தும்,தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படக் குழுவினர்,மற்றும் படத்தை வெளியிட்ட ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தைக் கண்டித்தும்,முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து தமிழகத்தில் மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி, திருவாரூரில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கை SDPI கட்சியினர் முற்றுகையிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.