திருவாரூர் நவ 22
திருவாரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம்,மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வாடகை கடைக்கு 18% GST வரியை ரத்து செய்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவாரூர் தபால் நிலையம் முன்பு A.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பா.மணிவேல் வரவேற்புரையும், S.பாலாஜி,N.G.சுகுமார்,D.முத்துக்குமாரசாமி, A.அக்பர் பாட்ஷா, VSNM முகம்மது இஸ்ஹாக், R.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராஜா.சீனிவாசன், S.செந்தில்குமார், நீடாமங்கலம் வணிகர் சங்கம் தலைவர் நீலன் அசோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள GST வரியின் மூலம் விலைவாசிகள் உயர்ந்து பொதுமக்கள் பாதிப்பு பெற்றுள்ளநிலையில், தற்போது வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு விதித்துள்ள வாடகை கடைகளுக்கு 18% GST வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்திடவேண்டும்.
மேலும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு GST வரியை முழுமையாக ரத்து செய்திட வலியுறுத்தினா்.
இதில் சங்க துணைத்தலைவர்கள் P.ஜெயராமன்,S.ஐயப்பன், G.V.பாபு,P.சக்திவேல்,P.கணேசன், R.துரைவேலன், A.சுபான் அலி.
சங்க செயலாளர்கள் ரா.சக்திவேல்.K.கார்த்திகேயன், செய்யது உசேன், S.சரவணன்,S.சபுர்கான், ASJ.கார்த்திகேயன்,A.பாண்டி,
திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள்,மற்றும் அனைத்து வணிக வர்த்தகர்கள் என ஏராளமானவர்கள் வாடகை கடைகளுக்கு 18% GST வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இறுதியாக வர்த்தகச் செய்தித் தொடர்பாளர் சே.சுதாகர் நன்றி தெரிவித்தார்.