பண்டிகை காலம் நெருங்கி விட்டது. பெரும்பாலான
நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன.
இது போனஸின் கதை!
சரி இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது?
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, வார சம்பள முறை (ஒவ்வொரு வாரமும் சம்பளம்), மாத சம்பள முறையாக (4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம்) மாற்றப்பட்டது.
பெரும்பாலான மாதங்களில் 4 வாரம் போக,
கூடுதலாக 1 - 3 நாட்கள் வரை இருக்கும். இப்படி ஒவ்வொரு மாதத்திலும் மீதமாகும் நாட்களை கணக்கில் கொண்டால், அதுவே இன்னொரு மாதத்துக்கான அளவு வரும். இந்தத் தொகையே, போனஸாக வழங்கப்படுகிறது.
இந்த போனஸ் நடைமுறையை ஆங்கிலேய அரசு தர மறுத்ததால், 1930ம் ஆண்டிலிருந்து சுமார் 10 ஆண்டுகளாக மகாராஷ்ட்ராவில் உள்ள பல்வேறு தொழிலாளர் நல சங்கங்கள் போராட்டம் நடத்தி
வந்தனர். போராட்டத்தின் பயனாக 1940ல், ஜூன் 30-ம் தேதி முதன்முதலில் இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது.