எச்சரிக்கைத் தேவை
-------------------------
Promethazine Oral Solution
Kofexmalin Baby Cough Syrup
Makoff Baby Cough Syrup
Magrip N Cold Syrup
ஹரியானாவைச் சேர்ந்த Maiden Pharmaceuticals என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த நான்கு இருமல் மருந்துகளை மேற்கு ஆப்ரிக்காவின் காம்பியாவில் குடித்த 69 பிள்ளைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியுள்ளது.
உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளதைப் போல மருந்து மாத்திரைகளிலும் கலப்படம் அதிகரித்துவிட்டது. இந்திய இராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் நான்கில் ஒன்று தரக்குறைவானது என்று மத்திய அரசின் CAG ஆய்வறிக்கை கூறுகிறது.
உண்ணுகின்ற உணவிலும் உட்கொள்கின்ற மருந்துகளிலும் விழிப்புணர்வு பெறவில்லையென்றால் தீராத நோய்களில் சிக்கி பொருளாதாரத்தையும் உயிரையும் இழக்கும் நிலை உண்டாகும்.
இருமல் மருந்தை விட்டும் தேவையில்லாத மருந்து மாத்திரைகளை விட்டும் இயன்றவரை பிள்ளைகளை பாதுகாப்பது நம் சந்ததிகளுக்கு செய்யும் பெருந்தொண்டு.
தற்போது வருவது போன்ற சீசன் காய்ச்சல் சளி இருமலுக்கு இயன்றவரை கைமருந்து எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.
இருமல் மட்டுமல்ல எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் படைத்துள்ள உண்மையான மருந்துகளை நாம் தான் கண்டறிய வேண்டும் என்ற வேட்கை உம்மத்தின் வாழ்வியல் இலக்காக வேண்டும்.
அதற்கு நீட் தேர்வை காட்டிலும் விலங்கியல் தாவரவியல் நுண்ணுயிரியல் உயிரிவேதியியல் உள்ளிட்ட படிப்புகளில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள பிள்ளைகளை ஆர்வப்படுத்த வேண்டும்.