அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் களம் கண்டனா். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. மொத்தம் 96% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சசிதரூர் 1,000 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், 8000 க்கும் அதிகமான வாக்குகள் பெற்று கார்கே வெற்றி பெற்றிருப்பது கட்சியினருக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய நிகழ்வு.
கார்கே அவர்கள் மூட நம்பிக்கைகள் மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி தன்னை ஒரு பகுத்தறிவு வாதியாக வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
1969யில் குல்பர்கா காங்கிரஸ் கமிட்டியின் நகர தலைவராக பொறுப்பேற்று தன் அரசியல் பயணத்தை துவக்கி 50 ஆண்டுகளுக்கு மேலாக நெடிய பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சியில் அவரது உழைப்பையும்,விசுவாசத்தையும் காட்டுவதாக இருக்கிறது.
பாராட்டும் வாழ்த்தும் கூறிக் கொள்ளும் அதே வேளையில் பிரிவினைவாத அரசியல், வெருப்பு அரசியல்,இந்து ராஷ்டிரா அமைப்பது,தன்னை எதிர்போர்கள் மீது ஏவப்படும் அடக்கு முறைகள் போன்ற பாசிச சித்தாந்தங்களை எதிர்க வலுவான,உறுதியான செயல்பாடுகளை அவர் முன்னெடுக்க வேண்டும்.
கட்சி பூசல்கள்,களையப்பட்டு கட்டமைக்கப்பட்ட தொண்டர் அணியை உருவாக்க வேண்டும்.
நாட்டில் நெருக்கடி நிலையை அறிந்து அதற்கான திட்டங்களை உருவாக்க கூடிய தலைவராக செயல் படுவதே அவர் முன்இருக்கும் சாவல்களாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வு காங்கிரசின் புனர் அமைப்பிற்கான நிகழ்வாக அமைய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.