Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

குழந்தையின் உயர்வு உங்கள் கையில்
Oct 20 2022 கலை இலக்கியம்

குழந்தையின் உயர்வு உங்கள் கையில்

ஒரு ஊரில் ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்து வந்தது.  அவர்களில்  கணவன்,  மனைவி, குழந்தை என மூன்று பேர்  இருந்தார்கள். அந்த குழந்தை தான் படிக்க வேண்டிய பாடங்களை நல்ல முறையில் படித்து வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தாள். சிறுவயதில் இருந்து அந்த  குழந்தையின் அப்பா ஒரு சிறிய பலகை துண்டை எடுத்து அதில்  அக்குழந்தையின்  பெயரை  எழுதி  பெயரின்  பின்னால்   IAS என்று எழுதி இருந்தார்.  (முஹப்பத் நிஷா IAS) அந்தப் பலகையை அவர் வீட்டினுள் சுவரில் மாட்டி வைத்திருந்தார். இந்த பலகையை தினமும் அந்த குழந்தை பார்த்துக் கொண்டே இருந்தது. ஒரு நாள் அப்பாவிடத்திலே   IAS என்றால் என்ன? என்று அக்குழந்தை கேட்டது.  அதற்கு அந்த குழந்தையின் அப்பா IAS- ன் விளக்கத்தை தெளிவான முறையில் அந்த குழந்தையின் மனதில் பதியும்படி உணர்த்தினார். அதை போல் தினமும் அந்த  குழந்தையின் அப்பா  பள்ளிக்கு செல்லும் வழியில் கிடக்கின்ற முள்,கல் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு போவார்.
 இதுபற்றி அந்த குழந்தை அப்பா இடத்தில் கேட்டது அதற்கான விளக்கத்தையும்  சொன்னார். இன்னும் வழியில் பார்க்கின்ற அனைவருக்கும் இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும் என்று கூறி புன்சிரிப்புடன் கடந்து செல்வார். இதை தினமும் கவனித்து வந்த அந்த சிறுமி அப்பாவை போல நல்ல செயல்களை செய்து நல்லமுறையில் வளர்ந்து வந்தாள். இப்போது அவளின் வயது 5 இறைவன் நாடினால்  வருங்காலத்தில் IAS ஆக வருவாள். நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லதை செய்வாள். இதைதான் இறை தூதர் முகம்மது  அவர்கள் சொன்னார்கள். 10 வயதிற்கு மேல் தான் குழந்தையை அடிக்க வேண்டும் என்று, காரணம் என்ன வென்றால் 10 ஆண்டு காலம் தாய் தந்தை தான் அவர்களின் பாடம். அவர்கள் எதை வெளிப்படுத்துகிறார்களோ அதை தான்  குழந்தையிடம் இருந்து அறுவடை செய்வார்கள். அதனால் பெற்றோர்கள் ஆகிய நாம் நல்லமுறையில் வாழ்ந்து பிள்ளைகளையும் நல்லமுறையில் வளர்த்து  இருஉலகிலும் வெற்றியாளர்களாக  இறைவன் ஆக்கி அருள் புரிவானாக.  


ரிஃபாய்தீன் அல்தாஃபி_