Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இரக்கமில்லாமல் சுட்டு கொல்லப்பட்ட 2 லட்சம் ஆடுகள் | ஆடு VS மனிதன்
Oct 20 2022 நாடும் நடப்பும்

இரக்கமில்லாமல் சுட்டு கொல்லப்பட்ட 2 லட்சம் ஆடுகள் | ஆடு VS மனிதன்

உணவிற்காக அறுக்கப்படும் ஒரு விலங்கு தானே ஆடு...
ஆடுகள் வேட்டையாடப்படுவதை நாம் எப்போதும் பார்த்திருக்க மாட்டோம்...

ஆனால் விலங்குகள் நல அமைப்புகளாலேயே 2 லட்சம் ஆடுகள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை (சம்பவம் இல்ல, இது ஆட்டுக்கும் மனிதனுக்கும் நடந்த யுத்தம்) அத சொல்றேன் வாங்க...

 

இது 1997-ம் ஆண்டு துவங்கிய யுத்தம்... இந்த போரில் எதிரிகளை தாக்க மிகவும் தேர்ந்தெடுக்க பட்ட ஸ்னைப்பர்கள், இரக்கமற்ற வான்வழி தாக்குதல்கள் மற்றும் பல மில்லியன் டாலர் கண்காணிப்பு தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்பட்டது...

 

ஆம் இவையனைத்தும் ஆடுகளை கொல்ல தான் பயன்படுத்தப்பட்டது. அது தான் கலாபகோசின்(Galápagos) ஆடுகளின் யுத்தம்...

 

கலாபகோஸ் தீவு வெறும் 7880 கி.மீ. கொண்ட ஒரு சிறிய தீவு தான் ஆனால் உலகின் மிக அறிய வகை உயிரினங்கள் பலவற்றின் வசிப்பிடமாக உள்ளது...

 

மரின் இக்குண (Marine Iguana) :

 

 

ப்ளூ பியூட்டேட் பூபி (Blue Footed Booby) :

 

 

 

கலாபோகஸ் ஆமை (Galápogas Tortoise) :

 

இது மிகவும் தனித்துவமான ஆமை வகையை சார்ந்தது. இந்த ஆமை இனம் தான் உலகின் பெரிதான ஆமைகளை கொண்டது. சுமார் 200 கிலோ-விற்கு மேல் எடையை கொண்டது. மிக நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய தன்மையை உடையது.

 

இதோ இந்த ஆமையின் பெயர் ஹாரியேட்(Harriet), 175 வருடம் உயிர் வாழ்ந்துள்ளது.

 

 

1990-களில் இந்த கலாபகோஸ் ஆமைகள் ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இது இந்த இனத்தையே முற்றிலும் அழித்துவிட கூடிய அளவிற்கு அபாயகரமானது.

 

அந்த அச்சுறுத்தல் என்னவென்றால் ஆடுகள்...

 

அட ஆமாங்க ஆடுகள் தான்...

 

இந்த ஆடுகள் மிக வேகமாக பரவி கலாபோகஸ் தாவரங்கள் அனைத்தையும் மிக வேகமாக உண்டு வந்தது. தீவுகளின் பசுமையை அளிப்பதன் மூலம் ஆமைகளின் ஒரே வாழ்வாதாரமான உணவை இந்த ஆடுகள் அழித்துக் கொண்டிருந்தது.

 

 

இந்த ஆமை இனத்தையே அழிவிலிருந்து காப்பதற்கு உள்ள ஒரே தீர்வு, ஆடுகளை அழிப்பது. எனவே, 1997-களில் சார்லஸ் டார்வின் அறக்கட்டளை மற்றும் கலாபகோஸ் தேசிய பூங்கா இணைந்து அனைத்து ஆடுகளையும் அழிப்பது என முடிவு செய்து இதற்கு ப்ராஜெக்ட் இஸபெல்லா(Project Isabela) என்று பெயரிடப்பட்டது.

 

விளைவு? சில வருடங்களிலேயே 90 சதவிகித ஆடுகள் கொல்லப்பட்டது. ஆனாலும் ஒரு சிக்கல். என்ன நடக்கிறது என்று ஆடுகள் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டன. எனவே அவை மரங்கள் மூடப்பட்ட இடங்களிலும், புதர்களிலும் பதுங்க துவங்கிவிட்டது.

 

தீர்வு? ஆடுகள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக இருக்கும் ஒரு இனம். கூட்டமாகவே நகரும். இதன் காரணமாக வான்வழி தாக்குதல் இனி உதவாது என்று உணர்ந்த ப்ராஜெக்ட் இஸபெல்லா குழுவினர் வேறொரு தந்திரமான யுக்தியை கையாண்டனர்.

 

அது தான் ஜூடாஸ் ஆடுகள் (Judas Goats). எப்படி புதிய ஏற்பாட்டில் ஜூடாஸ் யேசுவைக் காட்டிக்கொடுத்தது போல, இஸபெல்லா குழுவினர் தனது சொந்த மந்தைகளை காட்டிக் கொடுக்கும் ஜூடாஸ் ஆடுகளை உருவாக்க முடிவு செய்தனர்...

 

ஒரு கலாபகோஸ் ஆட்டைப் பிடித்து, அதில் கண்காணிப்பு கருவியை பொருத்தி மீண்டும் அதை தீவில் விட்டு விடுவார்கள். அந்த ஆடு தான் கருப்பு ஆடு(ஜூடாஸ் ஆடு).

 

 

ஜூடாஸ் ஆடு இயல்பாகவே தனது மந்தைக்கு செல்லும். இந்த ஆட்டின் ஒவ்வொரு அசைவையும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருவார்கள். ஜூடாஸ் ஆடு ஆட்டு மந்தையை திறந்த வெளி பகுதிகளுக்கு கொண்டு வர பழக்கப்பட்டிருக்கும்.

 

மந்தை ஆடுகள் திறந்த வெளிக்கு வந்தவுடன், ஜூடாஸ் ஆட்டை தவிர்த்து பிற ஆடுகளை சுட்டு கொன்றுவிடுவார்கள். மீண்டும் இதையே செய்வார்கள். பச்சை துரோகியான ஜூடாஸ் ஆடு.

 

 

2006-ல் ப்ராஜெக்ட் இஸபெல்லா $12 மில்லியன் செலவு செய்து 200000 ஆடுகளை கொன்றதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவு செய்கிறது...

 

இது மறைந்த கலாபகோஸ்-ன் பசுமையை மீண்டும் மலரச் செய்ததுடன் அழிவின் விளிம்பிலிருந்து கலாபகோஸ் ஆமைகளையும் காப்பாற்ற உதவியது. ஆனால் இதற்கான விலை 2 லட்சம் ஆடுகளின் உயிர்...

 

இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னன்னா, கலாபகோஸ் தீவிற்கு ஆடுகளை கொண்டுவந்ததே மனித இனம் தான்... ஆம், 1800 முதல் 1970 வரை கடற்கொள்ளையர்கள், தங்களது உணவின் தேவைக்காக இந்த ஆடுகளை தீவிற்கு கொண்டு வந்தார்கள். அது அந்த தீவையே அழித்து விடும் என்று அவர்கள் அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பில்லை....

 

சில விஷயங்களுக்கு சிலவற்றை தியாகம் செய்ய வேண்டி உள்ளது நிதர்சனமாக உள்ளது...

சரிங்க வரேன்...இதே மாதிரி சுவாரஸ்யமான இன்னொரு பதிவில் மீட் பண்ணுவோம்...Bye...

Related News