நம்மில் பல பேர் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் எங்கிர ஆசைகளில் போலி வேலை வாய்ப்பு நிறுவனத்திடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த சம்பவங்கள் அதிகம் உண்டு.
இது மாதிரியான சமயங்களில் சில வழிமுறைகள பின்பற்றுவதன் மூலம் இந்த தவறுகளை நாம் தவிர்க்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வேலை வாய்பிர்க்காக வேலை வாய்ப்பு நிறுவனங்களை அனுகும் போது அந்த நிறுவனத்தை குறித்து சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
• இனையத்தில் குறிப்பிட்ட நிருவனத்தைப் பற்றிய செய்தியை தேடிப் பாருங்கள்.
• எத்தனை ஆண்டு காலமாக இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
• இந்த நிறுவனத்தின் * Review & Ratings * எவ்வாறு இருக்கிறது.
• *Lowest Rating* ஐ பார்ப்பது சிறந்தது போலியானதாக இருந்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் அதை குறிப்பிட்டு இருப்பார்கள்.
• முடிந்தால் நிறுவனம் அமைந்திருக்கும் பகுதிக்கு நேரில் சென்று சுற்றுப்புறத்தில் அந்த நிறுவனத்தை குறித்து விசாரியுங்கள்.புதிதாக துவக்கப்பட்டதா , எவ்வளவு காலமாக இயங்கி வருகிறது என.
• முன்பணம் * Registration Fees * கட்டும்படி சொன்னால் தவிர்ப்பது சிறந்தது.
• வீசா கிடைத்த பிறகு குறிப்பிட்ட நாடுகளில் இருக்கும் தெரிந்த நபர்கள் மூலமாக இந்த வீசா உன்மையில் சம்பந்தப்பட்ட கம்பெனியிலிருந்து தான் வழங்கப்பட்டதா என உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்வதனால் தேவையற்ற ஏமாற்றங்களையும் பண இலப்பையும் தவிர்க்கலாம்.