மூத்த பத்திரிகையாளரான டி.ஜே.எஸ். ஜார்ஜ் The Dismantling of India என்ற புத்தகத்தில், இந்தியாவை மிகவும் பாதித்த 35 இந்தியர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். ஜே.ஆர்.டி. டாடா, மகாத்மா காந்தி, நேரு, இந்திரா, அப்துல்கலாம் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது...
வழக்கமாக இம்மாதிரிப் பட்டியல்கள் உருவாகும்போது அதில் தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து யாரும் இடம்பெற மாட்டார்கள். அரிதாக பெரியாரின் பெயர் இருக்கும்...
ஜார்ஜின் புத்தகத்தில் சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். என தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரின் பெயரும் இருக்கிறது. இன்று இந்தப் புத்தகத்திற்கு The Hinduவின் Magazineல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது...
சி.என். அண்ணாதுரை குறித்து சொல்லும்போது திராவிட நெறிமுறைகள் குறித்து உலகிற்கு வரையறுத்துச் சொன்னவர் என்கிறார்...
"திராவிட கலாச்சாரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் நம்மை உணர வைத்தவர் அண்ணாதுரை. அந்த வகையில் வேறு யாரும் செய்யாத அளவுக்கு இந்திய வரலாற்றின் மீது அவர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்..."
வடக்கு - தெற்கு பிளவு பற்றியும் பேசியிருக்கிறார்: "தென்னிந்தியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம் வட இந்தியக் கலாச்சாரத்தோடு பொருந்தாது. இந்தப் பார்வை பலரால் ஏற்கமுடியாததாக இருக்கலாம். இது தேசபக்தியுள்ள ஒரு இந்தியனின் பார்வையாக இல்லாமல் இருக்கலாம். மன்னிக்க வேண்டும். நாங்கள் தென்னிந்தியர்கள். நாங்கள் விஷயங்களை வேறுவிதமாகப் பார்ப்போம் எங்களிடம் பாரபட்சம் கிடையாது. திராவிடப் பார்வை, ஆரியர்களைவிட பல்கலாச்சாரங்களை ஏற்கக்கூடியது" என்கிறார்...
புத்தகம்: The Dismantling of India, TJS George
வெளியீடு: Simon & Schuster; விலை: 899/-