Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அவள் ’அவல்’ தானா ?
Oct 26 2022 நாடும் நடப்பும்

அவள் ’அவல்’ தானா ?

அண்ணா விட்டுடுங்க !
அடிக்காதீங்க வலிக்கிறது !!
பையா பிளீஸ் சோட்தோ முஜே !
இது தற்கால இந்தியப் பெண்களின்
அறிவிக்கப்படாத இன்னொறு தாய்மொழி!
 
விடாதே அடி ! கொல் !
நாக்கை அறு ! முதுகெலும்பை உடை
கட்டிபோடு , கருவறைக்குள் பூட்டு
இது எதிரியை நோக்கிய கோசமல்ல !
உன்னுள் பாதியை உருக்குழைத்து
மண்ணில் வாழத் தகுதியற்ற
ஈனப்பிறவிகளின் ’வெற்றிக் கரகோசம்’ !
 
அடிக்கடி முழங்கிடும் ஜே ! கோசங்களுக்குள்
இவள் முணங்கள் எப்படி கேட்கும் !
வடக்கு வாழ தெற்கு தேயும்
இது  அரசியல் பழமொழி !
இன்றோ வடக்கும்  நிர்பயாக்களை வாழவிடவில்லை !
தெற்கிலோ கடந்தகாலத்தில்
பொள்ளாச்சியில் தொல்லை!
 
 
 
இருப்பதை விற்று கடன்பட்டு
 கல்விக்காய் வித்யாலயம் சென்றாலும் !
பூக்கா மொட்டுக்களையும்
கசக்கி முகர்ந்திடும் காமுகச் சிறியாரோ
ஆசிரியராய் வருகின்றான் !
கோடிப்பொன் தருகிறேன் என்றாலும்
கோவை பொண்தாரணியின்
போன உயிர் திரும்பாதே?
 
 
பெண்களின் கனவுக்கோட்டைகளை
தகனமேடைகளாக்கிய
அருப்புக்கோட்டை நிர்மலாதேவி கூட
அன்றைய ஊடக வெறும்வாய் அசைவிற்கு
கிடைத்த  ’அவல்’  அவ்வளவு தான் !
 
சீதை சிதை மீண்டாள் இந்த மண்ணில்
அது காவியம் !
அவள் சிதைக்கப்பட்டு எரிக்க சிதை மூண்டால்
இந்த மண்ணெங்கும் பாவிமயம் !!
அதனால் தான் காஷ்மீரத்து ஆசிபாக்கள்
 ’ஆசி ’ மறுக்கப்பட்டும்
தில்லி சபியாக்கள் ’சபிக்கப்பட்டும்’ வீழ்கிறார்கள்!!
 
 
 
இன்று நியாயத்திற்கு போரடுவதிலும்
பாரபட்சம் என்பது வேதனையின் உச்சம்!
தலித்தென்று தெரிந்து
கடந்து செல்கின்றீர்கள்
சிறுபான்மைதானே என்று சினக்க மறுக்கின்றீர்கள் !!
அவளும் பெண்தான் என்று பார்க்காத நீங்கள்
இந்த சமூகக்கூந்தலுக்குள் நடமாடு ’பேன்கள்’ !
 
பக்கத்து வீடு எரிந்தாலும்
அது சமையல் நெருப்பு என்று
சப்பைகட்டு கட்டும் பொதுபுத்திகளே !
உங்கள் அகக்கண்களை நமக்கேன் வம்பு
என்ற அழுக்குத்துணிகளால் கட்டிக்கொள்ளாதீர்கள் !!
ஏன் தெரியுமா அந்த நெறுப்பு
இன்று போய் நாளை உங்களிடம் வரும் !
 
உங்களை தீப்பந்தம் ஏன் ஏந்தவில்லை
என்று கேட்கவில்லை ! மாறாக
நீங்கள் குறிப்பிட்ட சிலருக்கு ஏந்தும்
சம்பிரதாய  மெழுகுவர்த்திகளை
எல்லோருக்கும் ஏன் ஏந்தவில்லை
என்று தான் கேட்கிறோம் !
ஓ! உங்கள் குற்ற மனசாட்சிகளின் சூட்டில்
மெழுகுகள் உருகிவிடுமோ எனும் அச்சமா?
 
 
கூட்டுமனசாட்சிக்கு தீர்பெழுதும் பேனாக்களே !
இந்த கூட்டுப்புழுக்களும் கொஞ்சம் எழுதுங்கள்!
இனியாவது சட்டத்தின் மீட்சிக்கு
உங்கள் பேனா முட்கள் உடைபடட்டும் !
மேசையை தட்டி அமைதிப்படுத்தும்
உங்கள் அதிகாரச் ’சுத்தியல்’கள்
இனியாவது அநீதி ’தரு’தலைகள் மீது
இடியாக இறங்கட்டும் !!
அப்போது தான் அவள் ’அவல்’ தான்
என்ற நிலைமாறி
அவள் அவளாவாள்
மனிதம் ’அழகாகும்’

Related News