31/10/2022 திருவாடனை தொகுதி ஆர் மங்கலம் தாலுகா ஆனந்தூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிக தாழ்வான மின் கம்பிகளால் இரண்டு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை உடனடியாக மாற்றக்கோரி செயற் பொறியாளர் (Excutive Enginear) அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அவற்றில் தமுமுக மற்றும் மமக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், தமுமுக மாவட்ட செயலாளர் ,J. ஜாவித் அஸ்ஸாம், ஒன்றிய செயலாளர் ரைஸுல் இஸ்லாம் ஆகியோர் உடன் இருந்தனர்.