Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நிலவில் முதல் காலடி!
Nov 02 2022 காலக்கண்ணாடி

நிலவில் முதல் காலடி!

நிலவில் முதல் காலடி

20ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனை என்றால் அது நிலவில் மனிதன் கால் பதித்தது தான் என்று சொன்னால் மிகையாகாது. பூமியில் இருந்து சுமார் மூன்றரை லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் நிலவு இருக்கிறது. ஆனால் அங்கு மனிதன் சுவாசிக்க தேவையான காற்றோ ,குடிப்பதற்கு தண்ணீரோ கிடைப்பதில்லை இதன் காரணமாகவே நிலாவுக்கு சென்று வருவது சாத்தியமற்ற காரியமாக இருந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் ரஷ்யா 12 /4 /1961 ககாரின் (gagarin) என்ற முதல் விண்வெளி வீரரை பூமியைச் சுற்ற விண்வெளிக்கு அனுப்பி வைத்தது, அடுத்த கட்டமாக வேலன்டினோ தெரஸ்கோவா என்ற 26 வயதுப் பெண்ணை 16/ 6 /1963 அன்று அனுப்பி வைத்து சாதனை படைத்தது. என்னதான் ரஷ்யா முன்னணி வகித்திருந்தாலும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான கென்னடி கூறினார்; "சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வெற்றி பெறப்போவது அமெரிக்கா தான் என்றார்", இதன் முயற்சியாக 1969 ஜூலை 21, அமெரிக்க விண்வெளி வீரர்களான ஆல்ட்ரின் , ஆம்ஸ்ட்ராங் மற்றும் மைக்கேல் காலின்சை நிலவுக்கு அனுப்பியது, அப்போலோ 11 மூலம் நிலவை சென்றடைந்தார்கள். அப்பொழுது உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட இருக்கும் அதிசயம் காலை 8:26 மணிக்கு நிகழ்ந்தது, விண்ணோடத்தின் கதவைத் திறந்து வந்த ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் தன்னுடைய கால் தடத்தை பதித்தார், என்னதான் நிலவுக்கு மூன்று நபர்கள் சென்று இருந்தாலும் நிலவில் முதலில் கால் தடம் பதித்தவர் என்ற பெருமை ஆர்ம்ஸ்ட்ராங்குக்கே சேரும், நிலவிலே அவர்கள் 21 மணி நேரம் ,36 நிமிடங்கள், 21 வினாடிகள் இருந்தார்கள். அங்கிருந்து 48  பவுண்ட் எடையுள்ள நிலவின் கற்களை எடுத்து வந்தார்கள். மேலும் நிலவிலே அமெரிக்க கொடியை நட்டு விட்டு, 24/ 7/ 1969 இரவு 10:19 மணி அளவில் பூமியில் கடலில் வந்திறங்கினார்கள். அவர்களை அமெரிக்க மக்கள் பாராட்டி கௌரவித்தார்கள். 

"நிலவில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததால் அதன் பிறகு அதற்கு யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை"

பின்னாளில் நிலவில் தண்ணீர் இருப்பதை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் சந்திரயான் 1 திட்டத்தின் மூலம் கண்டறிந்தனர்