வாட்ஸப்பிலிருந்து போலிக்கணக்குகள் நீக்கப்பட்டன!
வாட்ஸ் அப்-ல் இருந்து, கடந்த செப்டம்பரில் இந்தியாவில் மட்டும் 26 லட்சத்துக்கும் அதிகமான போலிக்கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமான மோசடி செய்யும் கணக்குகள் முடக்கப்பட்டன.
தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் திருத்தப்பட்ட புதிய ஐடி விதிகளின் கீழ், மேலும் 26.85 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டன.
வாட்ஸ்அப் பயனர்களிடமிருந்து பெற்றப்பட்ட எதிர்மறை பின்னூட்டம், ஸ்பேம், தேவையில்லாத விளம்பரங்கள், மோசடி புகார்களுக்கு ஆளான கணக்குகள், ஆபாசச் செய்திகள் மற்றும் ஆபாசப் புகைப்படங்களை அனுப்பும் கணக்குகள், பயனர்கள் ப்ளாக் செய்த கம்பெனி விளம்பர கணக்குகள் ஆகியவற்றைத் தடை செய்யப்பட்டுள்ளது.