தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தலைமை செயற்குழு கூட்டம் எம்.எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் இன்று திருச்சி என். எம் கே. காலனி எஸ் எஸ் மஹாலில் நடைபெற்றது.
மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம். எல். ஏ,. தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி மாநில பொருளாளர்கள் ஹபிபுல்லா கான் மற்றும் கோவை உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் 68 அமைப்பு மாவட்டங்களில் கிளைக் கழகம் முதல் மாவட்டம் நிர்வாகம் வரை கழக அமைப்பு தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடித்து ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெற்று புதிதாக பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட 430 தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் கட்சியின் செயல் அறிக்கைகள் வரவு செலவு கணக்குகள்,
அமைப்பு விதிகளில் திருத்தம் மற்றும் புதிய விதிகளை சேர்ப்பது என தலைமை செயற்குழுவில் பல்வேறு பொருட்களில் விரிவாக விவாதங்கள் நடைபெற்றது.
மேலும் தலைமை செயற்குழுவில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை திரும்ப பெற வேண்டும் தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது.
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இறுதிசெய்யப்பட்டது.
இந்த தீர்மானங்கள் அனைத்தும் சமயபுரம் அருகே நாளை நடக்கும் தலைமை பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.