கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராமுக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஃபிரான்ஸ் நாட்டு செவாலியே விருது வழங்க உள்ளதாக அறிவிப்பு
கர்நாடக இசைப் பாடகி, இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம் (70) பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதுக்குத் தேர்வாகியுள்ளார்
செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரான்ஸ் குடியரசின் கலாசார அமைச்சர் ரீமா அப்துல் மாலிக்: "இந்த விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு உங்களின் ஏராளமான பங்களிப்புகளுக்கு எங்கள் நாட்டின் பாராட்டுக்கான அடையாளமாகும். இந்த விருது பிரான்ஸ் நாட்டின் மீது நீங்கள் எப்போதும் கொண்டுள்ள நட்பை குறிக்கிறது. உங்கள் செயல்பாடு மற்றும் உங்கள் படைப்புகள் மூலம் கர்நாடக இசை உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். பிரெஞ்சு கலைஞர்களுடனான உங்களின் பல கூட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிரான்சில் அடிக்கடி நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம், பிரான்ஸ் மற்றும் இந்தியாவை நெருக்கமாக கொண்டு வரவும், இரு நாடுகளுக்கிடையே கலாச்சார மற்றும் கலை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நீங்கள் பெரிதும் பங்களித்துள்ளீர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார். அருணா சாய்ராம் கூறுகையில் : "இது மிகவும் சந்தோஷமான தருணம். உலக அரங்கில் எனக்கான ஒரு அங்கீகாரம். அதற்கு மேலாக எனக்கு பொறுப்புணர்ச்சி கொடுத்திருக்கிறது. ஊக்கப்படுத்தும் இத்தகைய விருதுகள் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதாக உணர்கிறேன். பிரான்ஸ் அரசாங்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி". இவ்வாறு அவர் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இன்னும் இவர் மத்திய அரரின் பத்மஸ்ரீ, தமிழக அரரசின் கலைமாமணி, மியூசிக் அகாடமியின் கலாநிதி போன்ற உயரிய சிறப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை ஃபிரான்ஸ் நாட்டின் புகழ்மிக்க ஆட்சியாளர் நெப்போலியன் உருவாக்கினார்.