தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தச் சில நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த உத்தரவின் முழு விவரம்:
✍️தமிழ்நாட்டில் 44 இடங்களில் RSS அணிவகுப்பை, சுற்றுச்சுவர் கூடிய மைதானங்களில் மட்டும் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி;
✍️இதனால் பிரதான சாலை, தெருக்களில் ஊர்வலம் நடத்த முடியாது
✍️கோவை, நாகர்கோயில் உள்பட 6 இடங்களில் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்தது சரியே: நீதிபதி கருத்து
✍️பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது
✍️லத்தி, கம்புகளை எடுத்துச் செல்லக் கூடாது
✍️மதம், சாதி குறித்து தவறாக பேசக் கூடாது;
✍️இந்திய இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது
✍️நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்: நீதிபதி அறிவிப்பு