Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பண மதிப்பிழப்பு நடவடிக்கை
Nov 08 2022 நாடும் நடப்பும்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை

நவம்பர் 8, 2016

நவம்பர் 8, 2016: இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள். அன்று இரவு 8 மணிக்கு இந்தியப் பிரதமர் பணமதிப்பிழப்பு - demonetisation நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். அதற்குச் சில காரணங்களைக் கூறினார். அந்தக் காரணங்களுக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். அதையெல்லாம் படித்தால், இவ்வளவு நல்ல விஷயங்களா? என வியப்படைவீர்கள்.

1. கள்ளப் பணம் - கள்ள நோட்டு ஒழியும்.

2. கருப்புப் பணம் ஒழியும்.

3. டிஜிட்டல் எகானமி - டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகும்.

4. கேஷ்லெஸ் எகானமி - பணமில்லாப் பொருளாதாரம்உருவாகும்.

5. டெர்ரர் ஃபண்டிங் - தீவிரவாதிகளுக்கான பணப் பரிவர்த்தனை இல்லாமலாகும்.

6. ஊழல் ஒழியும்.

7. வேலைவாய்ப்பு பெருகும்.

8. இவையனைத்துக் காரணங்களால் ஜிடிபி உயரும்.

உண்மையில் என்ன நடந்தது?

1. கள்ள நோட்டை ஒழிக்க முடியவில்லை.

2. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை.

3. டிஜிட்டல் எகானமியா? அப்படின்னா என்ன?

4. கேஷ்லெஸ் எகானமி - பணமில்லாப் பொருளாதாரமும் உருவாகவில்லை. இன்னமும் நூற்றுக்கு 80 பேர் பணத்தைத்தான் தருகிறார்கள்.

5. தீவிரவாதிகளுக்கான பணப் பரிவர்த்தனையும் குறைந்ததுபோல் தெரியவில்லை.

6. ஊழல் ஒழிந்துவிட்டதா? பாஜக ஆளும் கர்நாடகாவில் அதன் முதல்வர், அமைச்சர்கள் எந்தத் திட்டத்திலும் 40% கேட்கிறார்களாம்.

7. புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. இருந்த வேலைவாய்ப்புகளும் குறைந்தன.

8. ஜிடிபி ஒவ்வொரு காலாண்டிலும் சரிகிறது. கூடவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து கொண்டேயிருக்கிறது.

பிறகு, எதைத்தான் சாதித்தது பணமதிப்பிழப்பு - demonetisation?

ATM மற்றும் வங்கி வாசல்களில் மக்களை நிற்கவைத்து 150 பேரைக் கொன்றார்கள். இது பெரிய சாதனையில்லையா, இந்தச் சாதனை போதாதா?

Related News