**********நாவு**********
உண்மையைச் சொன்னேன் உதைத்தார்கள்
நல்லதை சொன்னேன் நயவஞ்சகன் என்றார்கள்
அன்பை வெளிப்படுத்தினேன் அயோக்கியன் என்றார்கள்
அறிவை வெளிப்படுத்தினேன் அரவேக்காடு என்றார்கள்
குறைகளை சுட்டி காட்டினேன் குருடன் என்றார்கள்
உதவிகள் பல செய்தேன் உதவாக்கரை என்றார்கள்
மனிதனின் நாவு மாமனிதர்களை தூற்றியதே நம்மவர்களை சும்மா விடுமா என்ன
நாவை அடக்குவோம் நல்வாழ்வை ஆரம்பிப்போம்
ரிபாய்தீன் அல்தாஃபி