Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and Space)
Nov 09 2022 ஆன்மீகம்

கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and Space)

அறிஞர்களில் பலர் காலம் என்றே ஒன்று இல்லை என்றும் கூறுவர். ஆனால் சில நூற்றாண்டுகள் முன்பு வரை சிறந்த விஞ்ஞானிகளாக திகழ்ந்தவர்கள் அரிஸ்டாட்டில் மற்றும் ஐசக் நியுட்டன், அவர்களின் காலம் பற்றிய கூற்றுக்களைக்கூட பொய் என நிரூபித்தார் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீனின் ஒளி பற்றிய ஆராய்ச்சியில் இருந்த ஈடுபாடே அவரை காலத்தையும் வெளியையும் பற்றி சிந்திக்க வைத்தது. காலம் என்றால் என்ன என்பதை பல்லாயிரம் வருடங்களாக தவறான விளக்கம் கொண்டவர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது ஐன்ஸ்டீன் (Einstein) மற்றும் கொடேலின் (Godel) காலம் வெளி பற்றிய கருத்துக்கள் என்றால் அது மிகையில்லை.

காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டின் பிறப்பிடமும் ஒன்றே. அதாவது இந்த பிரபஞ்சம் உருவாக்க பட்ட போது அதற்கு இணையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த காலம். தற்போது அதை பிரிக்க முடியாமல் வெளிகாலம் (spacetime) என்றே அழைக்கின்றனர்.


காலமே இல்லையெனில் இந்த வெளி எப்படி இருக்கும், எப்படி இயங்கும் என நினைக்கும் போது தலை சுற்றினாலும் அப்படி இயங்குவதற்கு வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது. இயங்குகின்றது என்றாலும் மனிதனுக்கு இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எதுவும் இருந்திருக்காது.

பெருவெடிப்பு மூலம் (?!) உருவான இப்பிரபஞ்சம், எந்தவித அறிவையும் தன்னகத்தே கொள்ளாத இப்பிரபஞ்சம் தனியாக உருவாகி இருக்க வேண்டும், பாருங்கள் காலத்தையும் தன்னுடனேயே அழைத்துக்கொண்டு செல்கின்றது. தன்னுடைய இலக்கை சரிவர செய்ய காலம் என்ற ஒன்றை தன்னோடு அணைத்து கொண்டு வர வேண்டிய அவசியம் அதற்கு என்னவென்று தெரியவில்லை. காலம் உருவானதற்கான எந்த பரிணாம கதையும் பரிணாம அதரவாளர்களிடமிருந்து கிடைக்கவில்லை. காலம் என்பது முழுக்க முழுக்க மற்ற பொருள்களை சார்ந்தே உள்ளது. அது கடவுளை மெய்ப்படுத்த கூடிய ஆணித்தரமான ஆதரமாகவும் உள்ளது.

தற்போதைய விஞ்ஞானத்தின்படி காலம் என்பது நீளம், அகலம், உயரம் போன்ற ஒரு நான்காவது (!?) பரிமாணமே. காலத்தில் பிரயாணம் செய்யும் வாய்ப்பு உள்ளது என்று தெளிவு படுத்தினர் ஐன்ஸ்டீனுக்கு பின் வந்த விஞ்ஞானிகள், அதன் அளவீட்டிற்கான சூத்திரதையும் கண்டறிந்தனர். காலத்தில் நாம் முன்னோக்கி செல்லலாம், சிம்பிளாக சொல்லவேண்டுமென்றால் நமது பயண வேகத்தை அதிகபடுத்த அதிகபடுத்த காலத்தை விரைவாக கடந்து எதிர்காலத்திற்கு சென்று விடலாம். ரிலேடிவிட்டி படி ஒளியின் வேகமே வேகத்திற்கான எல்லை என்பதை அறிவீர்கள், அதையும் மிஞ்சிய வேகத்தில் (ஒரு வார்த்தைக்கு) பயணித்தால் காலத்தில் பின்னோக்கி பயணிக்கலாம் அதாவது இறந்த காலத்திற்கு செல்லலாம் என கூறப்பட்டாலும் அதற்கான வாய்ப்புகளை தெளிவு படுத்தவில்லை. அதில் பலவகை முரண்பாடுகள் காணப்படுவதால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

வெளிக்கு காலம் தேவையான ஒன்று என்று ஜோடி சேர்த்து விட்டது எது?, தானாக உருவான வெளி எனில் அது எப்படி காலத்தையும் தன்னுடன் இணைத்து கொண்டு இருக்க வேண்டும். காலம் என்பது உயிரினங்கள் (?!) போன்று சிறுக சிறுக தானாக உருவானது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இவ்விடத்தில் பரிணாமகதைக்கும் வேலை இல்லை.

ஐன்ஸ்டீனுக்கு முந்தைய விஞ்ஞானிகளும் கூட காலத்தை பற்றிய தவறான கருத்து வைத்திருக்கையில், பண்டைய வேதங்களில் காலத்தில் பிரயாணம் (Time Travel) செய்த செய்தியும், கால மாறுதல் (Time dilation) பற்றிய செய்திகளும் அதிக அளவில் காண முடிகிறது. விஞ்ஞானிகளே தவறு என்று எண்ணிய செய்திகளை மதங்களை சேர்த்தவர்கள் எப்படி தெளிவாக பெற்றனர் என்பது கடவுளே இல்லை என்று கூறுபவர்களுக்கு கூட மூக்கில் விரல்வைக்கும் அளவிற்கு தான் உள்ளது. மனித மூளை தனக்கு அறியப்படாத விசயங்களை விளக்குகிறது எனில் அதன் மூலம் வேறொரு இடமாகத்தான் இருக்கமுடியும்.

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் தங்களுக்கு சாதகமாக கடவுள் இருந்திருந்தால் தெரிந்திருப்பரே என்று வினா எழுப்புகின்றனர், அதற்கு பதில் கடவுள் தெரிகின்றார் ஆனால் உங்களால் தான் பார்க்க முடியவில்லை என்பதே.

ஆம், கரும்பொருள் (dark matter) மற்றும் கருப்பு ஆற்றல் (dark energy) என்பதை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள், அது என்னவெனில் கண்ணுக்கு தெரியாத உணரமுடியாத பொருள்கள். உண்மையில் நாம் காணும் உணரும் பொருள்களை தவிற வேறு சில காண முடியாத உணர முடியாத பொருள்களும் இந்த வெளியில்(Space) உள்ளன. இப்பிரபஞ்சத்தில் உள்ள மொத்த பொருள்களும் முழு அளவில் 17 % மட்டும் தான் உள்ளதாம், மீதமுள்ள 83% இடத்தில் நாம் பார்க்க முடியாத உணரவே முடியாத என்னவென்றே புரியாத இருந்த நிறைகள் (Mass) விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது, பிறகு அதுவே கரும்பொருள்கள் ) Dark Matters) என உறுதிபடுத்த பட்டுள்ளது.

உணரவே முடியவில்லை என்றாலும் நாம் அறியாத 83% பிரபஞ்சத்தை இந்த கரும் பொருள் அடைத்துள்ளது. உண்மையில் அந்த பொருள்களை காண நமது கண்களுக்கு சக்தி இல்லை, அதுவே கண்ணுக்கு தெரியாத கடவுளும் இருப்பதற்கான ஆதாரமாகவும் நமது கண்கள் அனைத்தையும் பார்க்கும் சக்தியுடன் உருவாக்க படவில்லை என்பதும் உண்மையாகிவிட்டது. அதற்காக கடவுள்வெளியில்உள்ளார் என்ற கருத்தை நாம் ஏற்கவில்லை, அவர்கால வெளியிற்குஅப்பாற்பட்டவராகதான் இருக்க வேண்டும்.

ஒரு வாதத்திற்கு இப்பிரபஞ்ச இயக்கத்திற்கு கடவுள் தேவை இல்லை அனைத்தும் தானாகவே கட்டுகோப்புடன் இயங்குகிறது என்றால் அதன் இயக்கங்களில் எந்த தடையும் வர வாய்ப்பே இல்லை, அது ஒரு குறிப்பிட்ட பாதையில் குறுப்பிட்ட வேலையை நடத்திக்கொண்டே இருக்கும். ஆனால் உண்மையில் பல நட்சத்திரங்கள் தன்னுடைய ஒளியை இழக்கின்றன, கோள்கள் பிற கோள்களோடு மோதுகின்றன. சில முரணான செயல்களும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. இதை பார்க்கும் போது எதோ ஒரு பிரமாண்டமான சக்தி இப்பிரபஞ்சத்தை தன்னுடைய விருப்பத்திற்கேற்ப ஒரு சீரமைப்பை வைத்துக்கொண்டு ஆட்டி படிப்பதை நம்மால் உணர முடிகிறது.

சிறு வாக்கியத்தில் கூட கடவுளை விளங்கி கொள்ளலாம், இயற்கைக்கு ஆறறிவை மிஞ்சிய அறிவு உள்ளதா? இல்லையெனில் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட உலக இயக்கம் எப்படி நடக்க வாய்ப்புள்ளது. ஒரு பொருள் தன்னுடைய மேம்பட்ட நிலையை அடையுமானால் அங்குதான் மிகபெரிய சக்தியின் ஈடுபாடு உள்ளது, அந்த மிகப்பெரிய சக்தியைத்தான் கடவுள், இயற்கை என குறிப்பிடுகிறோம். கடவுளே இல்லை என கூறும் நாத்திகர்களே, பெரு வெடிப்பில் எந்த சக்தியின் துணையும் இல்லாமல் உலகம் உருவாகி இருந்தால் ஒரே மாதிரி பொருள்கள் மட்டுமல்லவா உருவாகி இருக்கும், காலம், வண்ணம், ஒலி, வெப்பம் என வியக்கத்தக்க புதிர்கள் எல்லாம் எப்படி வந்தது, இவைகள் தானாக வந்தது என்பது எந்த வகையில் பகுத்தறிவு. சிந்தியுங்கள் பரிணாமவாதிகளே முட்டாள் தனத்தை போதிக்கும் நாத்திக பரிணாம கொள்கையை தூக்கி எறியுங்கள், உண்மையான பகுத்தறிவிற்கு வாருங்கள் கடவுளை உணருங்கள்.

சூரியன், பூமி, கோள்கள் என அனைத்தும் மிக தெளிவாக தம்முடைய வேலையை செய்து கொண்டிருக்கையில் அதன் மூலம் உணரக்கூடிய கடவுளை மட்டும் மறுப்பது கண்ணை கட்டி கொண்டு இவ்வுலகில் சூரியன் பூமி என எதுவுமே இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும்.

References:

http://www.pitt.edu/~jdnorton/teaching/HPS_0410/chapters/four_dimensions/index.html
http://www.lsst.org/lsst/science/scientist_dark_matter
http://theastronomist.fieldofscience.com/2010/05/dark-matter-confronts-observations.html
http://en.wikipedia.org/wiki/Dark_matter
http://universesandbox.com/screenshots/










 

 

Related News