பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் நேற்று (10.11.22) ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், படுகாயமடைந்த 13 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் பணிபுரிந்து வந்த வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவசி, வல்லரசு, பிரேமா, விக்கி, கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்
இந்தப் பகுதியில் இதுபோன்ற பட்டாசு ஆலைகள் எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் அதிகாரிகளை சரிக்கட்டி நடத்தப்பட்டு வருவதாகவும், இங்கு எத்தனைபேர் வேலை செய்கிறார்கள் என்ற விவரங்கள்கூட இருக்காது என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
வெடி விபத்து நிகழ்ந்து சிகிச்சைகளும் நிதி உதவி அளிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும்
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் ஆலைகளை மட்டுமே அனுமதித்து, மற்ற ஆலைகள் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட வேண்டும்.