கெர்சன் நகரத்தில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறியது. இதனால், தற்போதைக்கு போர் பதற்றம் இல்லை என உக்ரைன் நினைத்து கொண்டிருந்த நிலையில், நேற்று திடீரென உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணைகள் வீசி இந்த தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.
அந்த குண்டுகள் திசைமாறி சென்று நேட்டோ கூட்டமைப்பில் உள்ள போலந்து நாட்டின் கிழக்கு பகுதியான பெர்ஸ்வுடோவில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் போலாந்தை சேர்ந்த சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.