இயற்கையாகவே கூடுதல் ஆடையை பெண்களின் பாதுகாப்பு அம்சமாக நாம் கருதுகிறோம். அதனால்தான் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்க கூடாது என்று பள்ளியில் சீருடை நடைமுறைப்படுத்தி இருந்தாலும் ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட அதே சீருடை பெண்களுக்கும் கொடுப்பதில்லை. பெண் என்ற காரணத்தினால் பாதுகாப்புக் கருதி டாப்ஸ் நீலமாகவும் , மேனியை மறைக்க துப்பட்டாவும் கொடுக்கப்பட்டது.
எதை நாம் பாதுகாப்புனு நினைக்கிறோமோ அந்தத் துப்பட்டாவை தலையில் போடுவது கூடுதல் பாதுகாப்பு. ஹிஜாபை (முக்காடு) இஸ்லாத்தின் அடையாளமாக பார்க்காமல் பெண்களின் பாதுகாப்பு அரணாகப் பார்ப்போம்.
எப்படி ஈக்கள் மற்றும் எறும்புகளிடம் இருந்து மிட்டாயின் பாதுகாப்பிற்கு ஒரு கவர் தேவையோ அதே தத்துவத்தைத்தான் இஸ்லாமியப் பெண்கள் உயிர்மூச்சாகக் கடைபிடிக்கிறார்கள். ஆண்களின் ஊடுருவும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் மேலும் தன்னுடைய கணவனுக்கு மட்டுமே உரிமையான உடல் பாகங்களை மற்ற ஆண்களுக்கு காட்டும்படி இருக்கக்கூடாது எனறும் இந்த ஹிஜாப் (முக்காடு) முறையை தங்களுடைய உயிர் மூச்சாகவும் இந்த இஸ்லாமிய வழிகாட்டுதல் இருக்கிறது.
ஆபத்து நேரத்தில் பெப்பர் ஸ்பிரேயும், மிளகாய்த் தூளையும் பாதுகாப்புக்கானதாக நினைக்கிறோமோ அதேபோல் ஆபத்தை நெருங்க விடாமல் தடுக்க முன் எச்சரிக்கைக் கேடயம்தான் இந்த ஹிஜாப் (முக்காடு).
ஹிஜாப் அனிவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும்.
"வேறு ஆண்களுக்குத் தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்"
"அதுவே உங்களின் இதயங்களுக்கும் , அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானது"
பெண்களே முக்காடுகளை உங்கள் மீது தொங்க விடுங்கள், அறியப்படவும் தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.