மின்மினிகள்
1
நீ பேசாத
வார்த்தையெல்லாம்
மௌனமாய் பதிவானது
என் கவிதையில்
2
தீ போல் எரிந்த
உன் நினைவுகள்
எல்லாம்
இன்று புகையாய்!
3
ஆழமாய் சிந்தித்து
பார்த்ததில்தான்
புரிந்தது
நீ
ஆழம் காண முடியாத
கடல் என்பது
4
நீ சிரிக்கும்
ஒவ்வொரு
சிரிப்பிலும்
என் புது பிறப்பும்
இருக்கிறது
5
ஓடையில் ஓடும்
மீனாய் நெளிகிறது
உன் நினைவுகள்!
6
உதிரும் உன்
புன்னகையின் ஒவ்வொரு
தருணமும்
நான் அவஸ்தைக்கு
உள்ளாகிறேன்.
7
பொழுதுகள் மொத்தமும் பொல்லாதவை
நீ இல்லாதவை
8
அத்திப்பூவாய் அவ்வப்போது
பூக்கிறாய்
நீ என்
அடி மனதில்
9
உன்
வெயில் பார்வைபட்டது
நான் காய்ந்தேன்
சருகாய்!
10
மீட்க முடியாத
அடமானமாய்
நான் உன்னிடம்
- போத்தனூர் தாஜ்