Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

மாரடைப்பு
Nov 27 2022 வாழ்வியல்

மாரடைப்பு

மாரடைப்பு ஆபத்தைக் குறைக்க வேண்டுமா?

மாரடைப்பு ஆபத்துநிலையை 64% குறைக்கவேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படிக்கவும்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1916 முதல் 1960 வரை படித்த மாணவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேள்விகள் அனுப்பி ஆய்வு நடத்தப்பட்டது. 1993 வரை அவர்கள் செய்யும் அன்றாட வேலைகள், அவர்களின் மரணவிகிதம், மாரடைப்பு விகிதம் ஆகியவை ஆராயபட்டன. (Harvard alumni study)

முடிவுகள்:

முதல் மாரடைப்பு வரும் ரிஸ்க்: தினம் 50 படிகளாவது ஏறுபவர்களுக்கு தினம் 50 படிகளை ஏறாதவர்களை விட 25% குறைவு. 50 படிகள் என்பது தோராயமாக தினம் ஐந்து மாடி

இரண்டாம் மாரடைப்பு வரும் ரிஸ்க்: வாரம் 2000 கலோரிகளுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் கலோரி எரிப்பவர்களின் ரிஸ்க் விகிதம் , வாரம் 2000 கலோரிகளுக்கு குறைவாக உடற்பயிற்சியில் கலோரி எரிப்பவர்களது ரிஸ்கை விட 64% அளவு குறைவு.

(குத்து மதிப்பாக 1.6 கிமி நடந்தால் 100 கலோரி எரியும். ஆக 2000 கலோரிகளை எரிக்க வாரம் 32 கிமி நடக்கவேண்டும். நாள் ஒன்றுக்கு 5 கிமீ, வாரம் ஒரு நாள், இரு நாள் இடைவெளி எடுத்தாலும் இந்த 32 கிமீ எனும் எண்ணைத் தொட்டுவிட மறக்கவேண்டாம்.

அதனால் அனைவருக்குமான வாராந்திர டார்கெட், வாரம் 32 கிமி நடை, தினம் ஐந்து மாடி ஏறுதல். இது இரண்டையும் செய்துவந்தால் ஆயுள் நீடிக்கும்.

இது இரண்டையும் செய்யாமல் இருப்பவர்கள் உடனடியாக செல்போனில் Pacer ஆப்பை தரவிறக்கிக்கொண்டு தினம் குறைந்தது 5 கிமி நடக்கதுவங்கவும். அப்படி செய்தால் உங்கள் மாரடைப்பு ரிஸ்க் 64% குறையும்.

என் இன்றைய உடல்பயிற்சி:155 மாடி ஏறியது, 6 கிமி நடை. எரிக்கபட்ட கலோரிகள் 727

வாரத்தின் முதல் நாளிலேயே உடல்பயிற்சி மூலம் 727 கலோரிகளை எரித்தாகிவிட்டது. 2000 கலோரி டார்கெட் 3- 4 நாளில் அடைந்துவிடுவேன்

என்ன நடக்க ஆரம்பிச்சாச்சா? குட்.!

நன்றி: Neander Selvan