விபத்தில் துண்டான கையை உடலோடு இணைக்கப் பறந்த தமுமுக ஆம்புலன்ஸ்!
விபத்தில் துண்டான கையை இணைக்க 100 கிமீ தூரத்தை 1 மணி 5 நிமிடத்தில் மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டுசேர்த்த மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ்!
இன்று (2/12/2022) காலை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இந்திராணி என்ற பெண்மணியின் கை முழுவதுமாக துண்டானது, அவரை முதலில் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபொழுது துண்டான கையை உடனடியாக இணைக்கவேண்டும்; 2.30 மணி நேரத்திற்குள் திருச்சிக்கு கொண்டுசெல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கிருந்து திருச்சிக்கு மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம், பேரூர் கழக முன்னாள் தலைவர் சகோதரர் ராசிக் அகமது அவர்கள் பெண்மணியின் துண்டித்த கையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்; சுமார் 1 மணி 5 நிமிடத்தில் திருச்சி காவேரி மருத்துவமனையில் கையை பாதுகாப்பாக கொண்டு சேர்த்தார்.
விரைவாகக் கொண்டுசேர்த்த மதுக்கூர் தமுமுகவின் ஆம்புலன்ஸையும், அதன் ஓட்டுநர் ராசிக் அகமது அவர்களையும் மருத்துவர்கள் மற்றும் அந்தப் பெண்மணியின் உறவினர்கள் நன்றியோடு பாராட்டினர்.
கையை இழந்துள்ள பெண்மணி மற்றும் விபத்தில் சிக்கிய அனைவரும் பூரண குணமடைய பிராத்திப்பீர்.
என்றும் மக்களுக்கான பணியில்..
தமுமுக