தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
1900 -1940 ஆண்டுகளில் யூதர்கள் என்ற மதத்தை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விரட்டப்பட்டு பாலஸ்தீன மக்களிடம் தஞ்சம் அடைந்தனர்! வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டு மக்கள் போல மர்ஹபா என்று வரவேற்ற மக்களையே ஏமாற்றி அமெரிக்க பிரிட்டிஷ் நாடுகள் உதவியுடன் போர் செய்து கொன்று குவித்து விரட்டி விட்டு பெரும் பாலஸ்தீன நாட்டைக் கைப்பற்றி இஸ்ரேல் என்று அறிவித்து கொண்டனர் 1947 ல் அன்று முதல் இன்று வரை அவர்களுக்கிடையே போர் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது!
அதுபோல கடந்த 10 நாட்களாக, முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமிப்பு செய்து நவீன தொழில்நுட்ப ஆயுதங்களுடன் அமெரிக்க ஐரோப்பிய நாட்டு அதிபர்களின் துணையுடன் இஸ்ரேல், எஞ்சியுள்ள காசா பகுதி பாலஸ்தீன மக்கள் மீது குடிநீர் மின்சாரத்தை துண்டித்து குண்டு மழை பொழிந்து இன அழிப்பு நடத்துகிறது.
உலக மக்கள் அனைவரும் இஸ்ரேலின் வரம்பு மீறிய பாலஸ்தீன காசா மக்கள் மீது கொலை வெறி இன அழிப்பு தாக்குதலை ஆர்ப்பாட்டம் போராட்டம் மூலம் கண்டிக்கின்றனர்!
இந்நிலையில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பின் வருமாறு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்!
போர் என்பதே கொடூரமானது!
அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக #Gaza பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.
போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?
உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது.
ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்.